fbpx

பெங்களூரு குண்டுவெடிப்பு விவகாரம்!… கைதானவரிடம் சென்னையில் விசாரணை!

Bengaluru blast: பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் கைதான அப்துல் மதின் தாஹா என்பவரை சென்னை திருவல்லிக்கேணிக்கு அழைத்து சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் கடந்த மாதம் குண்டு வெடித்தது. இதில் 9 பேர் காயம் அடைந்தனர். குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய கர்நாடகா அரசு இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு குண்டு வைத்ததாக சந்தேகப்படும் நபரின் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு, அதன் அடிப்படையில் குற்றவாளியை தீவிரமாக தேடிவந்தனர்.

இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். குண்டுவெடிப்புக்கு பிறகு மேற்கு வங்கத்தில் தலைமறைவாக இருந்த முசாவிர் ஹூசைன் ஷாஜிப், அப்துல் மதின் தாஹா ஆகிய 2 பேரை என்.ஐ.ஏ கைது செய்தது. இந்நிலையில் இவ்வழக்கில் கைதான அப்துல் மதின் தாஹா என்பவரை சென்னை திருவல்லிக்கேணிக்கு அழைத்து வந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜ் மற்றும் பழைய கட்டிடம் ஒன்றிற்கு அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தி மீண்டும் பெங்களூரு அழைத்து சென்றனர்.

Readmore: மாலத்தீவு இல்ல!… முதல்வர் ஸ்டாலின் இங்கதான் போகிறார்!… ட்ரோன்கள் பறக்க தடை!

Kokila

Next Post

Candidate: 3-ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர்கள் யார் யார்...?

Sun Apr 28 , 2024
மக்களவைத் தேர்தல் 2024-ன் 3-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1352 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மத்தியப் பிரதேசத்தின் பேட்டுல் (எஸ்டி) தொகுதியில் ஒத்திவைக்கப்பட்ட தேர்தலில் போட்டியிடும் 8 வேட்பாளர்களும் இதில் அடங்குவர். மேலும் குஜராத்தின் சூரத் தொகுதியில் ஒரு வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த 12 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் வேட்பு மனுக்களைத் திரும்ப பெற 2024, ஏப்ரல் 22 கடைசி தேதியாக இருந்தது. […]

You May Like