கர்நாடக மாநிலம் குமாரசாமி லேஅவுட் பகுதியில் பார்க்கிங் பிரச்னையில் அக்கம்பக்கத்தினருக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவரது குடும்பத்தினர் 40 பேர் நள்ளிரவில் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்டோ ஓட்டுநரான சிவக்குமார், தனது வீட்டின் முன்பு ஆட்டோவை நிறுத்தி இருந்தார். அப்போது வெளியூர்வாசி ஒருவரின் உறவினர் வீட்டு முன்பு மற்றொரு ஆட்டோ நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து தடைபட்டது. எனவே ஆட்டோவை நிறுத்தியதற்கான காரணம் குறித்து சிவகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது, ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சலசலப்பு அதிகமானதால், இதனை பயன்படுத்தி, அங்கிருந்த உள்ளூர் நபர் ஒருவர் தனது கூட்டாளிகளுடன் வந்து ரகளையில் ஈடுபட்டதுடன், ஆட்டோ ஓட்டுநர் சிவக்குமார் மற்றும் குடும்பத்தினரை தாக்கியுள்ளார். இதனை தட்டிக்கேட்ட அக்கம்பக்கத்தினரையும் தாக்கியதால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சிளித்தது. மேலும் சிலர் இந்த சண்டையை பயன்படுத்தி, வீட்டுக்குள் புகுந்த பெண்கள், குழந்தைகளை தாக்கிவிட்டு, கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி, மொபைல் போனையும் பறித்துச் சென்றதாக பாதிக்கப்பட்டவர்கள் டிசிபி சிவபிரகாஷ் தேவராஜிடம் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
பார்க்கிங் பிரச்னையில் 40 பேர் நள்ளிரவில் தாக்கப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பேசும் பொருளாக மாறியுள்ளது.