fbpx

பெங்களூரு நடைமேடை டிக்கெட் இரு மடங்கு உயர்வு

பெங்களூருவில் முக்கிய ரயில்வே நடைமேடைகளில் கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அக்டோபர் 31 ம் தேதி வரை நடைமேடைக் கட்டணம் ரூ.10லிருந்து 20 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ’’ நடைமேடை டிக்கெட் கட்டணம் யஷ்வந்த்பூர் , கிருஷ்ணராஜபுரம் ரயில்நிலையம் எம்.பி. டெர்மினல்  உள்ளிட்ட ரயில்வே நடைமேடைக் கட்டணங்கள் ரு.20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இன்று முதல் அமலுக்கு வந்துள்ள கட்டணம் வரும் 31ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் தசரா பண்டிகை, தீபாவளி பண்டிகையை ஒட்டி அதிக அளவிலான மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக தற்காலிகமாக உயர்த்தப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனினும் பண்டிகைக் காலங்களில் உறவினர்களை நடைமேடைக்கு அழைத்துக் செல்ல உதவியாக வருபவர்கள் இதனால் கவலையடைந்துள்ளனர். பெரும்பாலானோர் பல மாதங்களுக்கு ஒரு முறை தான் வெளியூருக்கு பயணிப்பார்கள். விழாக்காலத்தின்போதுதான் உறவினர் வீடுகளில் நிறைந்திருக்கும். தற்போது கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  

Next Post

ரஜினி மகளுக்கும் முன்னாள் காதலருக்கும் திருமணமா? புதிய தகவலால் பரபரப்பு

Sat Oct 1 , 2022
நடிகர் ரஜினிகாந்தின் மகளும் தனுஷின் முன்னாள் மனைவியுமான ஐஸ்வர்யா முன்னாள் காதலரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது. ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவுக்கும் நடிகர் தனுசுக்கும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்தி வந்தார்கள். அவர்களுக்கு யாத்ரா , லிங்கா என்ற மகன்கள் உள்ளனர். 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் இவர்களின் உறவு முறிந்துவிட்டதாக இருவரும் கடந்த ஜனவரி மாதம் […]

You May Like