fbpx

”இதுக்கு மேல நீங்களே பாத்துக்கோங்க”..!! அரசியலில் இருந்து விலகுகிறார் விஜயகாந்த்..? வெளியான பரபரப்பு தகவல்..!!

ஸ்டைலால் ரஜினியும், ஜனரஞ்சக நடிப்பால் கமலும் தமிழ்த்திரை உலகில் பல ரசிகர்களைக் கொண்டிருந்த நேரத்தில் இயல்பான நடிப்பாலும், பேச்சாலும், சமூகக் கருத்துகளாலும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் தான் விஜயகாந்த். நடிக்க ஆரம்பித்த வெகு சில காலத்திலேயே அவரின் நெருங்கிய நண்பர்களால் ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டன. இலவச தையல் மெஷின் வழங்குவது, மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனங்கள் கொடுப்பது, இலவசத் திருமணங்கள் நடத்தி வைப்பது, ஆண்டுதோறும் தன் சொந்தப் பணத்தில் கல்வி உதவிக்கென 25 லட்ச ரூபாய் ஒதுக்குவது எனத் தனி சேவை சாம்ராஜ்யத்தையே நடத்தி வந்தார் விஜயகாந்த்.

அரசியல் நோக்கத்தோடு இவை எல்லாவற்றையும் செய்யாவிட்டாலும்கூட, ஒரு கட்டத்தில் அரசியலுக்கு வந்து இவற்றை எல்லாம் ஏன் செய்யக்கூடாது என நினைக்கத் தொடங்கினார். அதற்குக் காரணமாய் அமைந்தது தன் மன்ற நிர்வாகிகளுக்கு அரசியல் கட்சிகளும், ஆளும் அரசின் காவல்துறையும் கொடுத்த நெருக்கடிகள்தான் என தன் அரசியல் வருகைக்கு அறிமுகமும் தந்தார் நடிகர் விஜயகாந்த். 2000ஆம் ஆண்டிலேயே, தன் மன்றத்துக்கென, தனிக்கொடியை உருவாக்கினார்.

ஆனால், தற்போது உடல்நலக்குறைவு காரணமாக கட்சிப் பணிகளில் பங்கேற்பதில்லை. வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார். இதற்கிடையே, நாடாளுமன்ற தேர்தலும் விரைவில் வரவுள்ளதால், தேமுதிமுகவை வலுப்படுத்தும் பணியில் அவரது மனைவி பிரேமலதா ஈடுபட்டுள்ளார். விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத நிலையில், டிசம்பர் 14ஆம் தேதி செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் தேமுதிகவின் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான ஒப்புதலை விஜயகாந்திடம் பெற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், பிரமலதா தலைவராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Chella

Next Post

புயலாவது..? மழையாவது..? சிறப்பாக செயல்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு ரூ.4,000 ஊக்கத்தொகை..!!

Tue Dec 12 , 2023
தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட சேதத்தால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்ட மக்கள் தற்போது வரை மீள முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணத் தொகை ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில், புயலின்போது கடுமையாக உழைத்த தூய்மை பணியாளர்களுக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் ரூ.4,000 ஊக்கத்தொகை வழங்கினார். மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரமே […]

You May Like