fbpx

இந்திய சினிமாவுக்கு மிகச்சிறந்த பங்களிப்பு..!! நடிகை சமந்தாவுக்கு சிறந்த பெண்மணி விருது அறிவிப்பு..!!

சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி சார்பில் அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் செப்.27ஆம் தேதி விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தாவுக்கு விருது வழங்கப்பட உள்ளது. இந்திய சினிமாவின் மதிப்புமிக்க ‘ஆண்டிற்கான சிறந்த பெண்’ என்ற விருது சமந்தாவுக்கு வழங்கப்பட இருக்கிறது.

நடிகை சமந்தா “ஏ மாய சேசவே”, “ஈகா”, “நீதானே என் பொன்வசந்தம்”, “மகாநதி” மற்றும் “சூப்பர் டீலக்ஸ்” உள்ளிட்ட படங்களில் நடித்ததற்காக புகழ் பெற்றவர். இந்திய திரைத்துறைக்கு பல ஆண்டுகளாக மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

மேலும், மெகா ஸ்டார் சிரஞ்சீவி, ராம் சரண் மற்றும் பாலகிருஷ்ணா உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் இந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள உள்ளனர். இந்த விருதுக்கு நடிகை சமந்தா நன்றி தெரிவித்துள்ளார். ஒரு கலைஞராகவும், ஒரு பெண்ணாகவும் இந்த விருதை பெறுவது பெருமையாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Read More : ’உங்களை அனுமதித்தால் என் வேலை போயிடும்மா’..!! தேர்வெழுத தாமதமாக வந்த மாணவியிடம் கெஞ்சிய போலீஸ்..!!

English Summary

Samantha is to be conferred with Indian Cinema’s prestigious ‘Female of the Year’ award.

Chella

Next Post

”அது நான் இல்லை.. அட்மின் பார்த்த வேலையாக இருக்கலாம்”..!! சர்ச்சை வீடியோவுக்கு திருமாவளவன் விளக்கம்..!!

Sat Sep 14 , 2024
Video recording may be published by admin. I don't know about that.

You May Like