வயது வரம்பின்றி, எல்லா வயதினருக்கும் இருக்கும் பிரச்சனை என்றால் அது குதிகால் வலி தான். அதிக நேரம் நின்று வேலை செய்யும் பெரியவர்களுக்கு மட்டும் இல்லாமல், ஓடி விளையாடும் சிறுவர்களுக்கும் குதிகால் வலி ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். இந்த குதிகால் வலியை தாங்க முடியாமல் பலர் எத்தனையோ மருந்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிடுவது உண்டு. ஆனால், ஒரு சில மணி நேரத்திற்கு நிவாரணம் கிடைத்தாலும் பின்னர் மீண்டும் வலி வந்து விடும்..
இதற்கு நிரந்தர தீர்வே இல்லையா என்று புலம்புபவர்கள் அநேகர். ஆனால் இனி நீங்கள் கவலைப் பட வேண்டாம். உங்களிடம் ஓமவல்லி இலை இருந்தால் மட்டும் போதும். ஆம், பாடாய் படுத்தும் குதிகால் வலியில் இருந்து விடுதலை பெற, 4 ஓமவல்லி இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது இந்த இலைகளுடன், ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள், சிறிதளவு டூத் பேஸ்ட் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். இப்போது ஓமவல்லி இலைகளை நன்றாக இடித்து அதன் சாறை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது இந்த சாறுடன் மஞ்சள் தூள் மற்றும் டூத் பேஸ்டை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். நீங்கள் இப்படி கலக்கும் போது, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். இப்போது இந்தக் கலவையுடன் சிறிது தேங்காய் எண்ணெயும் சேர்த்து, பசை பதத்திற்கு கலக்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை இரவு தூங்குவதற்கு முன்பாக, குதிகாலில் வலி இருக்கும் இடத்தில் நன்கு தேய்த்து விட்டு, தூங்கச் செல்லுங்கள். நீங்கள் இப்படி தொடர்ந்து மூன்று நாட்களுக்கு செய்து வந்தால் போதும், குதிகால் வலி முற்றிலும் நீங்கி விடும்.