மூட்டு வலி என்பது சாதரணமான ஒன்றாக மாறிவிட்டது. ஆம், 30 வயதை தாண்டுவதற்கு முன்பே மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர். இதற்காக இளம் வயதில் இருந்தே கால்சியம் மாத்திரை எடுத்துக்கொள்ளும் பலரை பார்க்கிறோம். அதே சமயம், பலர் கண்ட கிரீம் மற்றும் ஸ்ப்ரே வங்கி பயன்படுத்துவது உண்டு. இதனால் தற்காலிகமாக நிவாரணம் கிடைத்தாலும் ஒரு சில நேரத்தில் மீண்டும் வந்துவிடும்.
மூட்டு வலி மட்டும் இல்லாமல், உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு மருந்து மாத்திரை இல்லமல் நிரந்தர தீர்வி அளிக்கும் முறை ஒன்று உள்ளது. Navel oiling அல்லது நாபி சிகிச்சை என்று அழைக்கப்படும் சிகிச்சை செய்வதால் நல்ல பலன் கிடைக்கும் என்று மருத்துவர் பொற்கொடு கூறுகிறார். அந்த வகையில் இரவு உறங்கச் செல்வதற்கு முன்பாக எந்த எண்ணெய்யை தொப்புளில் வைத்தால், என்ன பயன்கள் கிடைக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இரவு தூங்க செல்வதற்கு முன்பு, பாதாம் எண்ணெய்யை தொப்புளில் வைத்தால் சருமம் நல்ல பொலிவாகும். இதேபோல், மூட்டு வலிகளை குறைக்க தொப்புளில் நல்லெண்ணெய் வைக்க வேண்டும். இதன் மூலமாக நமது எலும்புகள் இயற்கையாகவே வலுப்பெறும். மேலும், இரவு தூங்குவதற்கு முன்பாக தொப்புளில் விளக்கெண்ணெய் வைத்தால், மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.
அது மட்டும் இல்லாமல், செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும். முகத்தில் இருக்கும் பருக்களை எந்த கிரீமும் இல்லாமல் குணப்படுத்த,இரவு தூங்குவதற்கு முன்பு வேப்பெண்ணெய்யை தொப்புளில் வைக்க வேண்டும். மேலும், இது சருமத்தில் உள்ள எல்லா பிரச்சனைகளையும் குணப்படுத்தும். நீங்கள் எண்ணெய்க்கு பதிலாக, நெய் பயன்படுத்தலாம்.
இது செரிமானத்தை சீராக்குவது மட்டும் இல்லாமல், உதடுகளில் ஏற்படும் வெடிப்பை நீக்குகிறது. அதே போல், தேங்காய் எண்ணெய்யை தொப்புளில் வைப்பதால் முடி உதிர்வு பிரச்சனை கனமாகும். இந்த எண்ணெய் அனைத்தையும் இரவு உறங்கச் செல்வதற்கு முன்னர் பயன்படுத்த வேண்டும் என மருத்துவர் பொற்கொடி குறிப்பிட்டுள்ளார்.
Read more: பெற்றோர்களே கவனம்!!! தனியாக கடைக்கு சென்ற சிறுமிக்கு, உடன் படிக்கும் மாணவர்களால் நடந்த கொடூரம்..