ஆரோக்கியமாக சாப்பிடுவதே தற்போது உள்ள காலகட்டத்தில் ஆடம்பரமாக மாறிவிட்டது. ஆம், விலைவாசி ஏறியுள்ள நிலையில், பலர் அதிக விலை கொடுத்து ஏன் காய்கறி வாங்க வேண்டும் என்று நினைக்கின்றனர். இதனால் முறுக்கு, சிப்ஸ், ஊறுகாய், அப்பளம் போன்றவற்றை காய்கறிகளுக்கு பதில் சாப்டுகின்றனர். பிரச்சனையே இதில் இருந்து தான் ஆரம்பமாகிறது.
ஆம், காய்கறிகளுக்கு பதில் இது போன்ற ஆரோக்கியமற்ற எண்ணெய் பலகாரங்களை நாம் சாப்பிடுவதால் உடலில் உள்ள ஹார்மோன்கள் பாதிக்கப்படுகிறது. இதனால் தைராய்டு, குழந்தையின்மை போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக தைராய்டு பிரச்சனை உள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
உடலில் தைராய்டு பிரச்சனை அதிகமாக இருக்கும் போது, உடல் வீக்கம், எடை அதிகரிப்பு அல்லது எடை இழப்பு, சோர்வு, வறண்ட சருமம், மன அழுத்தம், மலச்சிக்கல், கவனம் செலுத்த இயலாமை, மாதவிடாய் முறைகேடுகள், தசை மற்றும் மூட்டு வலிகள் போன்ற பிரச்சனைகள் அதிகமாக இருக்கும். இதனால் முடிந்த வரை தைராய்டு பிரச்சனையை குணப்படுத்துவது நல்லது.
ஆனால் இந்த பிரச்சனைக்கு நாம் மருத்துவமனைக்கு போகும் போது, நம்மை வாழ்நாள் முழுவதும் மருந்து, மாத்திரை சாப்பிட வைத்துவிடுவார்கள். இதன் மூலம் பக்க விளைவுகளும் ஏற்படும். இதனால் நமது முன்னோர்களின் முறைப்படி, உணவை மருந்தாக எடுத்துக்கொள்வது தான் சிறந்தது. அப்போது தான் நமது உடலில் எந்த பக்கவிளைவும் ஏற்படாது.
அந்த வகையில், கீழே கொடுக்கப்பட்டுள்ள கசாயத்தை வீட்டிலேயே எளிதாக தயாரித்து குடிப்பதால் தைராய்டு பிரச்சனை முற்றிலுமாக குணமடையும். அதனை எப்படி செய்வது என்று இந்தப் பதிவில் காண்போம். இந்த கசாயம் தயாரிக்க தேவையான பொருள்கள்: தனியா, ஓமம், பெருஞ்சீரகம், சீரகம், சுக்கு, கறிவேப்பிலை. அனைவரின் வீடுகளிலும் சுலபமாக கிடைக்கும் இந்த பொருள்களை வைத்தே நாம் கசாயம் தயாரித்து விடலாம்.
இதற்கு முதலில், சூடான கடாயில், மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் சேர்த்து, நன்கு வறுத்து எடுக்கவும். நன்கு வறுத்த பிறகு, அதனை ஆறவைத்து அரைத்துக் கொள்ளவும். பின்பு இந்த பொடியை காற்று புகாத ஒரு பாட்டிலில் போட்டு இரண்டு மாதத்திற்கு பயன்படுத்தலாம். இப்போது இந்த பொடியை அடுப்பில் கொதிக்கும் நீரில் ஒரு டீஸ்பூன் போட்டு நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டவும்.
- இந்த நீரை தினமும் காலையில் குடித்து வந்தால் தைராய்டு பிரச்சனை முற்றிலும் குணமாவதோடு, கர்ப்பப்பையில் உள்ள நச்சுக்களும் வெளியேறி விடும்.
Read more: மருத்துவமனைக்கே போகாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டுமா? அப்போ தொடர்ந்து 10 நாள் இந்த ஜூஸ் குடிங்க..