பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படும் ஒரு கொடுமையான குறைபாடு என்றால் அது ரத்த சோகை தான். ஆம், இது கேட்பதற்கு சாதரணமாக இருக்கலாம். ஆனால், ரத்த சோகை வந்து விட்டால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும். இரத்த சோகை ஏற்படும்போது, உடலில் ஹீமோகுளோபின் அல்லது இரத்தச் சிவப்பு அணுக்கள் குறைந்துவிடும். இதனால், திசுக்களுக்கு ஒக்சிஜன் சரியாக செல்லாது.
மேலும், இதனால், கடுமையான சோர்வு, மூச்சுத் திணறல், மார்பு வலி, தலைச்சுற்றல், வேகமான இதயத் துடிப்பு, பசியின்மை, உடையக்கூடிய நகங்கள், தொற்றுகள், வெளிர் தோல் ஆகியவை ஏற்படும். தலைசுற்றல் அடிக்கடி இருப்பாதால், எந்த வேலையும் சரியாக செய்ய முடியாமல் பலர் அவதிப்படுவது உண்டு. அந்த வகையில் இந்த ரத்த சொகையினால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான்.
கர்ப்பிணிகள் பலர் ரத்த சோகையினால் பாதிகப்படுவது உண்டு. அதே சமயம், பிரசவத்திற்கு பிறகும் பல பெண்களுக்கு ரத்த சோகை ஏற்படுவது உண்டு. அந்த வகையில் ரத்த சோகையில் இருந்து விடுபட நாம் மாத்திரைகளை சாப்பிட வேண்டும் என்ற அவசியமே இல்லை. வைட்டமின் – சி ஊட்டச்சத்து நிறைந்த சுவரொட்டி சாபிட்டால் போதும்.
இந்த சுவரொட்டியை தொடர்ந்து சாப்பிடுவதால், இரத்த சோகை வராமல் தடுக்க முடியும். சுவரொட்டியில் அமினோ அமிலங்கள், பி12, இரும்பு சத்துக்கள் ஆகியவை உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது மட்டும் இல்லாமல், உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும். இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இதை விட சிறந்த வழி கிடையாது.
இந்த சுவரொட்டியை நீங்கள் வறுவலாக செய்து சாப்பிடலாம். இதற்கு முதலில் ஒரு கடாய் வைத்து, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, அதில் சிறிது மஞ்சள் தூள் போட்டு, பின்னர் சுவரொட்டியை ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் வேகவைத்த சுவரொட்டி ஆறிய பிறகு, மேலே ரப்பர் மாதிரி உள்ளவற்றை நீக்கிவிட்டு நறுக்கவும்.
இப்போது ஒரு கடாயில் எண்ணெய், கடுகு, கருவேப்பிலை, பட்டை, லவங்கம், பெருங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், தக்காளி போட்டு வதக்கவும். பின்னர், தேவையான மசாலாக்களான மிளகாய்த்தூள், உப்பு, கரம் மசாலா, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கி, நறுக்கிய சுவரொட்டியையும் சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக வைத்து, கொத்தமல்லி தலைகளை தூவி இறக்கினால் சுவரொட்டி வருவல் ரெடி.