இன்றைய கால கட்டத்தில், பலருக்கு இருக்கும் பெரிய பிரச்சனைகளில் ஒன்று என்றால் அது முடி உதிர்வு தான். இந்தப் பிரச்சனை பெரியவர்களை விட இளம் வயதினருக்கு அதிகம் உள்ளது. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு இடங்களில் மட்டும் அதிக முடி உதிர்வு ஏற்பட்டு வழுக்கை ஏற்பட்டு விடும். இந்த நிலை வந்து விடக் கூடாது என்று கண்டதை தேய்த்து போராடுபவர்கள் அநேகர்.
மறுபக்கம், வழுக்கை தலையில் எப்படியாவது முடியை வளர்த்து விட வேண்டும் என்று போராடுபவர்கள் அநேகர். இது போன்று வழுக்கை விழுவதற்கு பல காரணங்கள் உண்டு. குறிப்பாக, நாம் சிறு வயதில் தலைக்கு எண்ணெய் தேய்த்து முடியை பரமரித்திருப்போம். ஆனால் வயது அதிகரித்த உடன் ஸ்டைல் என்ற பெயரில் நாம் முடியை சரியாக பராமரிக்காமல் விட்டு விடுகிறோம்.
ஒரு சிலருக்கு என்னதான் எண்ணெய் தேய்தலும் முடி கொட்டி வழுக்கை விழும். அதிக மன கவலை இருந்தாலும் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படும். அதேபோல் சரியான தூக்கம் இல்லாவிட்டாலும் முடி உதிர்வு பிரச்சனை அதிகளவு ஏற்படும். உடலில் சூடு அதிகரித்தாலும் முடி உதிர்வு அதிகம் ஏற்படும். மேலும், உடல் உள்ளுறுப்பான சிறுநீரகம் சூடானாலும் தலைமுடி உதிரும்.
அது மட்டும் இல்லாமல், கல்லீரல் சூடானாலும் தலைமுடி உதிர்வு அதிகளவு ஏற்படும். சிறுநீரகம், கணையம், கல்லீரல் போன்ற உறுப்புக்கள் சூடாகாமல் இருந்தால் தான் நமது முடி தலையில் இருக்கும். இந்த உறுப்புகள் சூடாகிவிட்டால் பின்பு முடி தரையில் மட்டும் தான் இருக்கும். அப்படி இந்த உறுப்புகள் சூடாகாமல் இருக்க, உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் அருந்த வேண்டும்.
அதாவது, 20 கிலோ எடை உள்ள நபர் குறைந்தபட்சம் 1 லிட்டர் தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும். இதை நீங்கள் உங்களின் எடைக்கு ஏற்ப கணக்கிட்டுக் கொள்ளலாம். மேலும், உடல் சூடு தணிந்து, முடி வளர்ச்சி அதிகரிக்க சூப்பர் குளியல் ஒன்று உள்ளது. ஆம், அது தான் இடுப்பு குளியல். முடி வளர்ச்சிக்கு இந்த குளியல் பெரிதும் உதவும் என்று மருத்துவர்களே தெரிவித்துள்ளனர்.

இதற்கு பாத்டப்பில், தண்ணீர் ஊற்றி இடுப்பிற்கு கீழ் உள்ள தொடை முங்கும் வரை படுத்துக் கொள்ள வேண்டும். கால்கள் வெளியில் நீட்டியவாறு இருக்க வேண்டும். இந்த இடுப்பு குளியல் போட்டால் சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகளில் சூடு தணியும். இதனால் முடி உதிர்வு, தூக்கமின்மை போன்ற பிரச்சனை நீங்கும். இதனால் தான் நமது முன்னோர்கள் ஆறு, வாய்க்கால்களில் குளித்தனர். இதற்கு நீங்கள் வீட்டில் இருக்கும் பெரிய வட்டத்தை பயன்படுத்தியும் குளிக்கலாம்.
Read more: பெண்களே, இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க… மீறினால் பெரும் ஆபத்து!!!