வெற்றிலையை தினசரி சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் அற்புத பலன்கள் என்னென்ன? எப்படியெல்லாம் வெற்றிலையை பயன்படுத்தவதும் அதனால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அந்த காலங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆரோக்கியமாகவும் உடல் வலிமையுடனும் இருந்ததற்கு அவர்களின் உணவு பழக்கங்களே முக்கிய காரணமாக இருக்கிறது. இருப்பினும், அன்றைய காலகட்டத்தில் வெற்றிலை போடுவதை அனைவரும் வாடிக்கையாக கொண்டிருந்தனர். இதுமட்டுமல்லாமல், வெற்றிலை பல சுப காரியங்களுக்கும், குறிப்பாக வீட்டு விசேஷங்கள், திருமணம் போன்ற நிகழ்ச்சியில் தாம்பூல தட்டில் வைப்பது தமிழர்களின் மரபு. அதுமட்டுமின்றி உண்ட பின்னர், வெற்றிலையுடன் பாக்கு-சுண்ணாம்பு சேர்த்து சாப்பிடுவது வழக்கமாகும். இந்தநிலையில், வெற்றிலையின் வேர், இலை என எல்லாவற்றிலும் மருத்துவ பலன்கள் ஏராளமாக உள்ளன.
வெற்றிலையில், ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டிமைக்ரோபியல் இருப்பதால் சிறு குழந்தைகள் ஏற்படும் கோழைக்கட்டு, அஜீரணக்கோளாறு, மல சிக்கல், பெரியோருக்கு ஏற்படும் கடுமையான தலைவலி, போன்ற பலவிதமான நோய்களுக்கு சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது. மேலும் இதில், மருத்துவ மூலிகை இருப்பதால், பசி உண்டாக்கும், ஆஸ்துமா, அலர்ஜி, அல்சர், வாத நோய், வறட்டு இரும்பல், நுரையீரல், செரிமான கோளாறு, ஒற்றை தலைவலி, பாலூட்டும் பெண்களுக்கு பால் சுரப்பது என அனைத்திற்கும் மருந்தாகவும் ஆரோக்கியமாகவும் பயன்படுகிறது.
சிறிதளவு வெற்றிலைகளைத் தண்ணீரில் போட்டு, அதனுடன் சீரகம் மற்றும் லவங்கப் பட்டை ஆகியவை சேர்த்து சூடு செய்து, தினமும் 1 முதல் 2 முறை குடித்து வந்தால், சுவாசக் கோளாறுகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.வெற்றிலையை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், வெளியில் இருக்கும் புண்கள் மற்றும் வயிற்றுப் புண்கள் ஆறும்.விறைப்புத்தன்மை பிரச்சனை உள்ள ஆண்கள், தினந்தோறும் 2 அல்லது 3 வெற்றிலைகளை சாப்பிட்டால் போதும் உடனடியாக நிவாரணம் கிடைக்கும். மூட்டுவலி இருப்பவர்கள் வெற்றிலையைச் சாறாக அரைத்து, வலி இருக்கின்ற இடத்தில் தினந்தோறும் தடவி வந்தால், ஒரு சில நாட்களிலேயே நல்ல முன்னேற்றம் காணலாம்
வெற்றிலையில் இயற்கையாகவே இருக்கும் வேதிப்பொருட்கள், பெருங்குடல் காற்று நீக்கியாக செயல்படுவதால், தேவையற்ற ஏப்பத்தை சரி செய்கிறது. வெற்றிலையை தினசரி சாப்பிட்டு வந்தால், உடல் எடை சீராகவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும், இது செரிமானத்தை ஒழுங்குபடுத்துவதால் தேவையற்ற உணவுகள் வயிற்றில் தங்குவதை தவிர்க்க முடியும். தினசரி 3 முறை வெற்றிலையை அரைத்து, அதன் சாற்றை விழுங்கினால், தொண்டையில் இருக்கும் புண்கள் வெகு விரைவாக குணமடையும்.