fbpx

நீங்கள் நினைப்பதை விட… மதுரைக்கு விரைவில் நல்ல செய்தி வரும்..! நிதியமைச்சர் பிடிஆர் ட்வீட்

”மதுரைக்கு விரைவில் நல்ல செய்தி வரும்” என ட்விட்டரில் கோரிக்கை வைத்தவருக்கு நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார்.

மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக நிதியமைச்சருமான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகிறார். இதையடுத்து, அதில் எழுப்பப்படும் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிப்பதோடு, தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிவிடுவது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக உள்ளது. இந்நிலையில், நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முதலமைச்சர் முக.ஸ்டாலினுடன் வெஸ்டர்ன் டிஜிட்டல் நிறுவனம் மற்றும் ஹால்டியா குழுமத்தினர் சந்தித்து தமிழகத்தில் தொழில் மூதலீடு குறித்து ஆலோசித்தாக பதிவிட்டிருந்தார்.

நீங்கள் நினைப்பதை விட... மதுரைக்கு விரைவில் நல்ல செய்தி வரும்..! நிதியமைச்சர் பிடிஆர் ட்வீட்

நிதியமைச்சரின் பதிவுக்கு டிவிட்டர் பயனாளி ஒருவர் மதுரைக்கு நிறைய தொழில் முதலீடுகளையும், தொழிற்சாலைகளையும், ஐடி நிறுவனங்களையும் கொண்டு வந்து சென்னை கோவை, பெங்களூருவை போல மதுரையில் தொழில் வாய்ப்புகளை பெருக்க வேண்டும் என பதிவிட்டிருந்தார். இதற்கு ட்விட்டரில் பதிலளித்த நிதியமைச்சர்… அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், நீண்ட காலமாக அதற்கு வேலை செய்து வருவதாகவும், நீங்கள் நினைப்பதை விட மதுரைக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என அவருக்கு பதில் அளித்துள்ளார். நிதியமைச்சரின் பதிலால் மதுரை மாவட்டத்தில் தொழில் வாய்ப்புகள், தொழில் முதலீடுகள் பெருகும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. இது மதுரை மக்களிடையே மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

‘தமிழ்நாட்டிலேயே பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கிறோம்’..! வெட்கப்பட்டு சிரித்த ராகுல்..!

Sun Sep 11 , 2022
மார்த்தாண்டத்தில் ராகுல் காந்தியை சந்தித்த பெண்கள், அவருக்கு தமிழ்நாட்டிலேயே பெண் பார்த்து திருமணம் செய்து வைப்பதாகக் கூறிய சம்பவத்தை குறிப்பிட்டு காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் ட்வீட் செய்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் 4 நாட்கள் தமிழகப் பயணம் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், மார்த்தாண்டத்தில் அவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக […]
‘தமிழ்நாட்டிலேயே பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கிறோம்’..! வெட்கப்பட்டு சிரித்த ராகுல்..!

You May Like