Mukbang video: ஒரே நாளில் 100 பர்கர்கள் சாப்பிட்டு சாதனை படைத்த ஜப்பானிய முக்பாங் நட்சத்திரமும் பிரபல யூடியூபருமான யுகா கினோஷிதா, உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
சமீபத்திய ஆண்டுகளில் Mukbang இணையத்தில் பிரபலமடைந்து வருகிறது. குறிப்பாக, YouTube போன்ற தளங்களில். Mukbang என்பது அதிக அளவிலான உணவை ஒரே மொத்தமாக சாப்பிடுவதை பதிவு செய்வதாகும். அதை சிலர் நேரடி ஒளிபரப்பில் தங்களின் பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். Mukbang என்பது “Mukja” (먹자, “உண்ணுங்கள்”) மற்றும் “bangsang” (방송, “ஒளிபரப்பு”) என்ற கொரிய வார்த்தைகளின் கலவையாகும். இது ஒரு நபர் அதிக அளவிலான உணவு உண்பதை பதிவு செய்து YouTube போன்ற சமூக வலைதளங்களில் நேரலையிலோ அல்லது வீடியோவாகவோ பகிர்வதாகும். இது பெரும்பாலும் YouTube, Twitch, AfreecaTV போன்ற ஸ்ட்ரீமிங் தளங்களில் காணப்படுகின்றன.
ஜப்பானை சேர்ந்த Mukbang யூடியூப் பிரபலம் யுகா கினோஷிதா. இவர், சுமார் 5.2 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளார். கினோஷிதா முதன்முதலில் 2009 ஆம் ஆண்டு ஜப்பானிய ரியாலிட்டி ஷோவான ‘பேட்டில் ஆஃப் தி க்ளூட்டன்ஸ்’ மூலம் அங்கீகாரம் பெற்றார் மற்றும் 2014 இல் தனது யூடியூப் செயல்பாடுகளைத் தொடங்கினார். 2009 ஆம் ஆண்டு The Battle of Big Eaters போட்டியில் பங்கேற்ற பிறகு கினோஷிதா பிரபலமானார். இதையடுத்து, தனது வாழ்க்கையின் சாதனையாக, கினோஷிதா ஒரே நேரத்தில் 20,000 கலோரிகளை உட்கொண்டு பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார். அவர் 600 வறுத்த கோழி துண்டுகள், 100 ஹாம்பர்கர்கள், 5 கிலோ ஸ்டீக் ஆகிய அனைத்தையும் ஒரே நேரத்தில் உட்கொண்டார். தீவிர உணவுமுறை இருந்தபோதிலும், அவர் வெறும் 47 கிலோ எடையை கொண்டுள்ளார். ஏனென்றால் இந்த உணவுகளை உட்கொள்வதால் அவரது உடல்நிலை மோசமடைய தொடங்கியது.
இதற்கிடையில், உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக தனது ஓய்வை அறிவித்துள்ளார். அதாவது, கினோஷிதா முக்பாங்ஸ் படப்பிடிப்பை நிறுத்துவதாகவும், மற்ற வகையான யூடியூப் ஒளிபரப்புகளைத் தொடர்வதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “எனக்கு வயிறு நிரம்பாவிட்டாலும், நான் சோர்வாக உணர்கிறேன்” என்று யூகா கூறியதாகக் கூறப்படுகிறது, மேலும் “என் உடல்நிலை மோசமடைந்துள்ளது, இனி முன்பு போல் சாப்பிட முடியாது என்று குறிப்பிட்டார். நான் 40 வயதை நெருங்கும்போது, எனது ஆற்றல் அளவுகள் குறைந்துவிட்டன, மேலும் இந்த வாழ்க்கை முறையைப் பராமரிப்பது பெரும் கடினமாகிவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
Readmore: துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததில் 3 வயது குழந்தை பலி!. விளையாட்டுத்தனத்தால் நேர்ந்த விபரீதம்