fbpx

உஷார்.!! இரவு முழுவதும் AC-யை போட்டு தூங்குறீங்களா..? என்னென்ன ஆபத்துகள் வரும் தெரியுமா..?

ஏசி வசதி உள்ளவர்களுக்கு இந்த கோடையில் ஏர் கண்டிஷனர்தான் நம்பிக்கை. காலை, மதியம், இரவு என ஏசியை ஆன் செய்து பலர் வெப்பத்தில் இருந்து காத்துக் கொள்கின்றனர். ஏசி யூனிட் உங்கள் அறையில் உள்ள வெப்பத்தை உறிஞ்சி அதே நேரத்தில் குளிர்ந்த காற்றை நிரப்பும். வீட்டை விரைவாக குளிர்விக்க ஏர் கண்டிஷனர் சிறந்த வழியாகும்.

ஆனால், கடுமையான வெப்பம் தூக்கத்தில் குறுக்கிடுவது போல், தூங்கும் போது ஏசியை ஆன் செய்து வீட்டை குளிர்விப்பது குறித்தும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது ”இரவு முழுவதும் ஏசியை இயக்காமல் இருந்தால் மின்சாரக் கட்டணம் குறையும். மேலும் உடல் உபாதைகள் ஏற்படுவதையும் தவிர்க்கலாம்” என்கிறார் நுரையீரல் சுகாதார மற்றும் ஆரோக்கிய இயக்குனர் கிறிஸ்டின் கிங்ஸ்லி.

நீங்கள் இரவில் தூங்கும்போது, ​​உங்கள் உடல் வெப்பநிலை குறையும். இது நல்ல தூக்கத்திற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. ஏசியை ஆன் செய்து கொண்டு தூங்குவது உடலுக்கு நல்லதல்ல. இது முழு தூக்கத்துக்கு கொண்டு செல்லாது. நிபுணர்களின் கூற்றுப்படி, தூங்கும் போது ஏசியை இயக்குவது ஒவ்வாமையை ஏற்படுத்தும். இது தூசிப் பூச்சிகள் மற்றும் பிற ஒவ்வாமைகளை அறைக்குள் கொண்டு கொண்டு வரும். இது காற்றை உலர்த்தி, அடைப்பை உண்டாக்கும்.

ஏசியை ஆன் செய்துவிட்டு தூங்கினால், நீரிழப்பு ஏற்பட்டு தூக்கத்திற்கு இடையில் அடிக்கடி எழுந்திருக்க வேண்டிய சூழல் உருவாகும். ஏசி காற்றை உலர்த்துவதால் தொண்டை, வாய், நுரையீரல் மற்றும் கண்கள் வறட்சியடையும். இதன் விளைவாக, சுவாச பிரச்சனைகளை பிற்காலத்தில் அனுபவிக்கக் கூடும். இரவில் ஏர் கண்டிஷனரை ஆஃப் செய்வதன் மூலம் மின்சாரத்தைச் சேமிக்கலாம். இதன் விளைவாக மின்சாரக் கட்டணம் குறையும்.

இரவில் தூங்குவதற்கு மிகவும் பொருத்தமான வெப்பநிலை எது..? வெப்பநிலை சுமார் 72-75 டிகிரி பாரன்ஹீட் இருக்கும்படி உங்கள் தெர்மோஸ்டாட்டை அமைக்கவும், அது சிறந்த தூக்கத்திற்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.

Read More : ’இந்துக்கள் மட்டுமே டார்கெட்’..!! ’கணவரின் நெற்றியில் குறிவைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்’..!! மனைவி கண்ணீர் மல்க பேட்டி..!!

English Summary

Sleeping with the AC on is not good for the body. It does not lead to full sleep.

Chella

Next Post

’பயங்கரவாதத்திற்கு இந்தியா என்றும் அடிபணியாது’..!! ’அப்பாவி மக்களைக் கொன்றவர்களை சும்மா விட மாட்டோம்’..!! அமித்ஷாவின் பரபரப்பு ட்வீட்..!!

Wed Apr 23 , 2025
Home Minister Amit Shah has said that India will never surrender to terrorism.

You May Like