fbpx

அசைவ பிரியர்களே ஜாக்கிரதை!… இரத்தத்தில் கலக்கும் கழிவுப் பொருள்!… அதிர்ச்சியூட்டும் ஆய்வு!

இறைச்சியை அதிகம் உண்பவர்களுக்கு ரத்தத்தில் யூரிக் அமிலம் சுரப்பது அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு என்ன காரணம் என்று பார்ப்போம்.

யூரிக் அமிலம் என்பது உடலின் கழிவுப் பொருள். இது கல்லீரலில் சுரக்கப்பட்டு சிறுநீரகங்களுக்கு அனுப்பப்படுகிறது. பின்னர் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகிறது.யூரிக் அமிலம் 3 காரணங்களால் அதிகரிக்கலாம். முதலில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் இரண்டாவது சிறுநீரகம் அல்லது கல்லீரலில் பிரச்சனை என்றால் அதிகரிக்கிறது. மூன்றாவதாக அதிக ப்யூரின் மற்றும் அசைவ உணவுகளை உண்பதால் அதிகரிக்கிறது. யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால், ஆரம்பத்திலேயே சில அறிகுறிகள் தென்படலாம். யூரிக் அமிலம் அதிகமாக இருக்கும்போது சில அறிகுறிகள் தோன்றும். உடல் அல்லது மூட்டுகளில் அதிக வலி உண்டாகும். மூட்டுகளில் கூச்ச உணர்வு, சிறுநீர் ஒரு விசித்திரமான வாசனை வரும். அதிகப்படியான குமட்டல் அல்லது வாந்தி உணர்வு இருக்கும்.

அதிக புரதம் மற்றும் பியூரின் உணவுகளை உட்கொள்வது யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும். குறிப்பாக சிவப்பு இறைச்சியில் யூரிக் அமிலத்தின் உற்பத்தியை அதிகரிக்கும் பியூரின்கள் அதிகம் உள்ளன. யூரிக் அமில பிரச்சனையால் பலர் அவதிப்படுகின்றனர். இதை சரிவிகித உணவின் மூலம் எளிதில் கட்டுப்படுத்தலாம். யூரிக் ஆசிட் பிரச்னையை கண்டறிந்தால், ஒரு வாரத்தில் எளிதாக குணப்படுத்தலாம். யூரிக் அமில உற்பத்தியைக் கட்டுப்படுத்த சில குறிப்புகள்: இறைச்சி சாப்பிடுவதைத் தவிர்க்கவும், ஆரோக்கியத்திற்காக வாழ்க்கை முறையை மாற்றவும், அதிக சர்க்கரை பானங்கள் குடிப்பதை நிறுத்தவும், உடற்பயிற்சி மற்றும் உடல் செயல்பாடு அவசியம், வழக்கமான உடல்நலப் பரிசோதனை மற்றும் வழக்கமான ஆரோக்கிய பராமரிப்பு அவசியம்.

Kokila

Next Post

விமானத்தில் பெண்ணுடன் நட்பு…! தரையிறங்கியவுடன் கற்பழிப்பு…! வசதிகளை காண்பிப்பதாக கூறி அரங்கேற்றிய கொடூரம்…

Fri Aug 25 , 2023
வடக்கு கோவாவின் அசோனோரா கிராமத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் பெண் சுற்றுலா பயணியை பலாத்காரம் செய்ததாக ஆன் சுற்றலா பயணியை கோவா போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் ஆகஸ்ட் 23 அன்று நடந்தது, மேலும் பாதிக்கப்பட்ட பெண் பயணியின் புகாரின் அடிப்படையில் குஜராத்தை சேர்ந்த, லக்ஷ்மன் ஷியார் என்ற 47 வயதான நபரை போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணும் கைது செய்யப்பட்ட லக்ஷ்மன் ஷியார் என்ற நபரும் […]

You May Like