fbpx

ஜாக்கிரதை!… ஒரே நேரத்தில் இரண்டு ஆணுறைகள் பயன்படுத்துகிறீர்களா?… பாலியல் தூண்டுதல் குறையுமா?

ஆணுறை பயன்பாடு மிகவும் நல்லது. ஏனெனில் இது பல நோய்த்தொற்றுகள் மற்றும் பிற பால்வினை நோய்களில் இருந்து உங்களை விலக்கி வைக்கிறது. அவை எல்லா வகையான கருத்தடை முறைகளையும் விட சிறந்தவை என்றும் கூறப்படுகிறது. ஆணுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் பால்வினை நோய்கள் பரவுவதைக் குறைக்கலாம். மேலும் தேவையற்ற கர்ப்பத்தின் வாய்ப்புகளை குறைக்க ஆணுறைகள் பெரிதும் உதவுகின்றன என்பது முற்றிலும் உண்மை.

கருத்தடைகளைப் பயன்படுத்தும் போது எந்தவொரு சிக்கல்களையும் தவிர்க்க எல்லோரும் விரும்புகிறார்கள் என்பது உண்மை தான். அதனால்தான் சிலர் ஒரே நேரத்தில் இரண்டு ஆணுறைகளைப் பயன்படுத்த முனைகிறார்கள், அது இரட்டிப்பு பாதுகாப்பு தரும் என்று கருதுகின்றனர். ஆனால் அறிவியல் ரீதியாக இதை செய்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஏனெனில் இரண்டு ஆணுறைகளை ஒரே நேரத்தில் பயன்படுத்தினால், அவற்றுக்கிடையே அதிக அழுத்தம் மற்றும் உராய்வு ஏற்படும். இதனால் இரண்டுமே கிழிந்துவிட வாய்ப்புகள் மிக மிக அதிகம். பின் அவற்றை பயன்படுத்தியும் உபயோகம் இல்லாமல் போய்விடும்.

பலர் பல ஆண்டுகளாக ஆணுறைகளைப் பயன்படுத்துகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு இதில் பல சந்தேகங்கள் இருக்கின்றன. ஆணுறைகளின் அதிகப்படியான பயன்பாடு பாலியல் ஆசைகள் மற்றும் பாலியல் உணர்வுகளை குறைக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால், கடந்த 2007ம் ஆண்டு இந்தியானா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஆணுறைகளைப் பயன்படுத்துவது பாலியல் இன்பத்தையும் உணர்ச்சிகளையும் குறைக்காது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆணுறைகள் தேவையற்ற கர்ப்பம் மற்றும் பாலியல் பரவும் நோய்களைத் தடுக்க மட்டுமே பயனுள்ளதாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Kokila

Next Post

விஜயகாந்த் குறித்து 2 நாட்களில் நல்ல செய்தி வரும்..! வீடியோ வெளியிட்டு உண்மையை உடைத்த பிரேமலதா...

Sat Dec 2 , 2023
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த நவம்பர் 18ஆம் தேதி காய்ச்சல், சளி தொந்தரவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது வரை சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக சில தினங்களுக்கு முன் அறிக்கை வெளியிட்ட மியாட் மருத்துவமனை, விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என்றும், அவருக்கு நுரையீரல் தொடர்பான சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்தை நடிகர் சங்க தலைவர் […]

You May Like