Modi: டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்றுகாலை 10:30 மணிக்கு நாட்டின் மிகப்பெரிய உலகளாவிய ஜவுளி நிகழ்வுகளில் ஒன்றான பாரத் டெக்ஸ் 2024 கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
பாரத் டெக்ஸ் 2024 கண்காட்சி இன்றுமுதல் பிப். 29 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் 5எஃப் தொலைநோக்குப் பார்வையைக் குறிக்கும் வகையில் ஃபைபர், ஃபேப்ரிக் ,ஃபேஷன் ,ஃபோகஸ் ஆகியவற்றின் மூலம் ஒட்டுமொத்த ஜவுளி மதிப்பு சங்கிலியையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்குகிறது. இது ஜவுளித் துறையில் இந்தியாவின் வலிமையை வெளிப்படுத்துவதுடன் உலகளாவிய ஜவுளி சக்தியாக இந்தியாவின் நிலையை மீண்டும் உறுதிப்படுத்தும் என்று நம்பிக்கையாக உள்ளது.
11 ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்களின் கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டு அரசின் ஆதரவுடன் நடைபெறும் பாரத் டெக்ஸ் 2024 வர்த்தகம் மற்றும் முதலீடு என்ற இரட்டை தூண்களின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது, இது நிலைத்தன்மையில் அதிகக் கவனம் செலுத்துகிறது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் 65 க்கும் மேற்பட்ட அறிவுசார் அமர்வுகள் இடம்பெறும், 100 க்கும் மேற்பட்ட உலகளாவிய குழு உறுப்பினர்கள் இந்தத் துறை தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கின்றனர்.
இந்திய ஜவுளி பாரம்பரியம், நிலைத்தன்மை மற்றும் உலகளாவிய வடிவமைப்புகள் போன்ற பல்வேறு கருப்பொருள்களில் ஃபேஷன் விளக்கக்காட்சிகள், அத்துடன் துணி சோதனை மண்டலங்கள் மற்றும் தயாரிப்பு செயல்விளக்கங்கள் ஆகியவற்றையும் இது கொண்டிருக்கும். பாரத் டெக்ஸ் 2024 இல் கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரிகள், 3,500 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள், 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 3,000 க்கும் மேற்பட்ட வாங்குபவர்கள் மற்றும் ஜவுளி மாணவர்கள், நெசவாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் ஜவுளித் தொழிலாளர்கள் தவிர 40,000 க்கும் மேற்பட்ட வணிக பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டின் போது 50-க்கும் மேற்பட்ட அறிவிப்புகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ஜவுளித் துறையில் முதலீடு மற்றும் வர்த்தகத்திற்கு மேலும் உத்வேகம் அளிக்கவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்சார்பு இந்தியா மற்றும் வளர்ச்சியடைந்த பாரதம் குறித்த பிரதமரின் பார்வையை முன்னெடுத்துச் செல்வதற்கான மற்றொரு முக்கிய முன்னெடுப்பாக இது இருக்கும்.
Readmore: ரூ.980 கோடி செலவில் நாட்டின் மிக நீளமான கேபிள் பாலம்…! நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி…!