fbpx

#Bharat Bandh..!! இன்று நாடு முழுவதும் ’பந்த்’..!! எவையெல்லாம் இயக்கும்…? இயங்காது…?

நாடு முழுவதும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் முன்னணி, உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதைக் கண்டித்து, இன்று பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் வகையில், கடந்த 2019இல் ஜனவரி மாதம் 8-ம் தேதி, 103-வது அரசியல் சட்ட திருத்த மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேறியது. இதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் வழங்கினார். இந்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்த அரசியல் சட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் 40 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கடந்த 2019இல் பிப்ரவரி மாதம் 6-ம் தேதி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதேநேரத்தில், இந்த இடஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க முடியாது என்றும் மறுத்து விட்டது.

#Bharat Bandh..!! இன்று நாடு முழுவதும் ’பந்த்’..!! எவையெல்லாம் இயக்கும்...? இயங்காது...?

தொடர்ந்து, கொரோனா காரணமாக இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இருந்து வந்த நிலையில், மனுக்களை விசாரிக்க கடந்த செப்டம்பர் மாதம் 8-ம் தேதி தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, எஸ்.பி.பார்திவாலா, எஸ்.ரவீந்திர பட், பேலா திரிவேதி ஆகியோர் அடங்கிய 5 பேர் கொண்ட அரசியல் சட்ட அமர்வு அமைக்கப்பட்டது. இந்த அரசியல் சட்ட அமர்வு கடந்த 7-ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு அளித்தது. அதன்படி, 40 மனுக்கள் மீது 4 தனித்தனி தீர்ப்புகள் வெளியிடப்பட்டன. இதில் தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி ரவீந்திர பட் ஆகியோர் 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராகவும், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, எஸ்.பி.பார்திவாலா, பேலா திரிவேதி ஆகியோர் 10 சதவீத இடஒதுக்கீடுக்கு ஆதரவாகவும் தீர்ப்பு வழங்கினர்.

இந்நிலையில், மாதம் 65,000 ரூபாய்க்கு மேல் வருமானம் பெறும் உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதைக் கண்டித்து, நாடு முழுவதும் இன்று பந்த் நடத்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு, தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகள் ஆதரவு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, #29thNovBharatBandh என்ற ஹேஸ்டேக் வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

Chella

Next Post

தோல் புற்றுநோயை வரவிடாமல் தடுக்க உதவும் இந்த பழத்தின் தோல்...

Tue Nov 29 , 2022
சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றில் வைட்டமின்கள் நிறைந்தவை. பழத்தில் சுவையை மட்டுமே ருசிப்பதற்கு மட்டுமே எடுத்து கொள்கிறோம். ஆனால் அதிலிருக்கும் தோல்களை தூக்கி எறிந்துவிடுகிறோம். ஆரஞ்சு பழங்களில் சுவைப்பதற்கு இனிமையாக இருக்கும். மேலும் இதில் வைட்டமின் சி அதிகம் காணப்படுகிறது. ஆரஞ்சு பழத் தோல்களிலும் வைட்டமின் சி-யின் சத்துக்கள் நிறைந்துள்ளன. தாவர கலவை மற்றும் பாலிபினால்கள் ஆரஞ்சு தோலில் இருப்பதால் இது நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமன் […]

You May Like