fbpx

B.E முடித்தவரா நீங்கள்? ரூ.90,000 வரை சம்பளம்.. BHEL நிறுவனத்தில் 400 காலிப்பணியிடங்கள்..!!

இந்தியாவின் முதன்மையான பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL), பொறியாளர் பயிற்சியாளர் மற்றும் சூப்பர்வைசர் பயிற்சியாளர் பதவிகளுக்கான 400 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பணி விபரம்: பொறியாளர் பயிற்சியாளர்கள் – 150, சூப்பர்வைசர் பயிற்சியாளர்கள் – 250 என மொத்தம் 400 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு ஊதியமாக 50,000 முதல் 90,000 வரை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: பொறியாளர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து தொடர்புடைய பொறியியல் துறையில் முழுநேர B.E./B.Tech./இரட்டை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சூப்பர்வைசர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து குறைந்தபட்சம் 65% மதிப்பெண்களுடன் (SC/ST வேட்பாளர்களுக்கு 60%) தொடர்புடைய பொறியியல் துறையில் முழுநேர டிப்ளமோ பெற்றிருத்தல் அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: இந்த பணிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச வயது 18 எனவும் அதிகபட்சம் வயது 27 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை: விண்ணப்பதார்கள் கணினி அடிப்படையில் (CBT) மூலம் விண்ணப்பதாரரின் தொழில்நுட்ப அறிவு மற்றும் திறன் மதிப்பீடு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

மருத்துவத் தேர்வு: இறுதித் தேர்வு BHEL இன் மருத்துவ உடற்பயிற்சி தரநிலைகளைப் பூர்த்தி செய்வதைப் பொறுத்தது. மேலும், விவரங்களுக்கு அதிகாரப்பூர்வத் தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

முக்கிய தேதிகள்: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் careers.bhel.in என்ற அதிகாரப்பூர்வப் பக்கம் மூலம் பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Read more : விளம்பர மோகம்.. கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழில் சுவாமி படம் இருக்கிறதோ இல்லையோ.. ஸ்டாலின் போட்டோ இருக்கும்..!! – வானதி சீனிவாசன் காட்டம்

English Summary

BHEL has released a notification to fill 400 vacancies.

Next Post

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தவெக.. எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்த ஆதவ் அர்ஜூனா..!! விழாவில் பங்கேற்காதது ஏன்..?

Sun Feb 2 , 2025
While Aadhav Arjuna was absent from TVK's second anniversary, X page congratulated him

You May Like