தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள பிபோர்ஜோய் புயல் அடுத்த சில மணிநேரங்களில் வலுவடைய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது கோவாவுக்கு 900 கி.மீ. தொலைவில் இந்த புயல் மையம் கொண்டுள்ளது. பிபோர்ஜோய் புயல் காரணமாக மகாராஷ்டிரா முதல் கேரளா வரையிலான அரபி கடல் பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெப்பச்சலனத்தால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இன்று முதல் ஜூன் 10ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சாவூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.