fbpx

ரோபோவை பயன்படுத்திய பைடனின் பொது மன்னிப்பு செல்லாது!. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை பாயும்!. டிரம்ப் அதிரடி!

Autopen: மன்னிப்பு ஆவணங்களில் கையெழுத்திட ரோபோவை பயன்படுத்தியதாக குற்றம்சாட்டியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜோ பைடன் கையெழுத்திட்ட அனைத்து மன்னிப்புகளும் செல்லாது என்று அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் குற்ற வழக்குகளில் சிக்கியவர்களுக்கு அதிபர் பொது மன்னிப்பு அளிக்க முடியும். இவ்வாறு மன்னிப்பு அளித்தால், மன்னிப்பு பெற்றவர்கள் மீதான வழக்குகளில் விசாரணை நிறுத்தப்படும். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அதிபரின் இந்த அதிகாரம் குறித்து, நீதிமன்றங்களும் கேள்வி எழுப்ப முடியாது. அமெரிக்க அதிபராக இருந்த ஜோ பைடன், தன் பதவி காலத்தின் கடைசி கட்டத்தில் பலருக்கு மன்னிப்பு வழங்கினார். மோசடி வழக்கில் சிக்கிய அவருடைய மகன் ஹண்டர் பைடனும் இதில் அடங்குவார்.

இதுதொடர்பாக, ட்ரூத் சோஷியல் பதிவில் டிரம்ப் பதிவிட்டுள்ளதாவது, ஒரே மாதிரியான பல உத்தரவுகளைப் பிறப்பிக்கும்போது, ஆட்டோபென் எனப்படும் ரோபோவின் உதவியை அதிபர் உள்ளிட்டோர் பயன்படுத்த முடியும். இதன் வாயிலாக, அதிகளவு ஆவணங்களில் கையெழுத்திட வேண்டியதில்லை. ஜோ பைடன் மன்னிப்பு வழங்கியதாக கூறப்படுவோருக்கான உத்தரவுகளில் இவ்வாறு ஆட்டோபென் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் ஜோ பைடன் தானாக கையெழுத்திடவில்லை. மேலும், இந்த ஆவணங்களில் என்ன இருந்தது என்பதும் அவருக்கு தெரிவிக்கப்படவில்லை.

அதனால், மன்னிப்பு வழங்கி ஜோ பைடன் உத்தரவிட்டதாகக் கூறப்படும் உத்தரவுகள் செல்லாது. அவர் மன்னிப்பு வழங்கியதாக கூறப்படுவோர், நீதிமன்ற விசாரணைகளை சந்திக்க வேண்டும். மேலும், ஜோ பைடன் பெயரை பயன்படுத்தி, ஆட்டோபென் வாயிலாக உத்தரவுகளை பிறப்பிக்க காரணமானவர்கள் மீதும் நடவடிக்கை பாயும் அதிரடியாக அறிவித்துள்ளார்.

Readmore: ஆவேசம்…! 2026 மே வரை காவல்துறை இனி தூங்கக்கூடாது…! அண்ணாமலை அதிரடி அரசியல்

English Summary

Biden’s pardon for using a robot is invalid!. Action will be taken against those who committed the mistake!. Trump takes action!

Kokila

Next Post

9 மாத வாழ்வா? சாவா? போராட்டம்!. இன்று காலை 8 மணிக்கு பூமிக்கு புறப்படுகிறார் சுனிதா வில்லியம்ஸ்!. எப்போது வந்தடைவார்கள்?

Tue Mar 18 , 2025
9 months of life? Death? Struggle!. Sunita Williams will remove the film from the space station at 8 am today!. When will she come?

You May Like