பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப விலையை நிர்ணயித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலையும் ஏறுமுகத்தில் உள்ளது. இதனால் ஏழை, நடுத்தரக் குடும்பங்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில், தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் விலையும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்திப் சிங் புரி அறிவித்துள்ளார். மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுபவர்களுக்கு ரூ.853-க்கு விற்பனை செய்யப்படுகிறது. உஜ்வாலா திட்டம் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுவோருக்கு ரூ.550-க்கு விற்கப்படுகிறது. இந்த சிலிண்டர் விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.