வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கு விதிக்கப்படும் வட்டி குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 6.25% இருந்த ரெப்போ வட்டியில், 0.25% குறைக்கப்பட்டு 6 விழுக்காடாக மாற்றப்பட்டுள்ளது. இதனால், வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் பெறும் வீட்டுக் கடன், வாகனக் கடன் போன்றவைகளுக்கு வட்டி விகிதம் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனிநபர் கடனை பொறுத்தவரை கடன் புதிதாக வாங்கினால் தான் குறையும். ஏற்கனவே உள்ள கடன் வட்டி விகிதம் குறையாது. வீட்டுக்கடன்கள் கண்டிப்பாக குறைய வாய்ப்பு உள்ளது. சுமார் 36 லட்சம் கடன் வாங்கியவர்களுக்கு வீட்டுக்கடன் வட்டி 20 வருடத்தில் எவ்வளவு குறையும் என பார்ப்போம். ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா பொறுப்பேற்ற பின், அவர் தலைமையிலான முதல் நிதிக் கொள்கை குழு ஆலோசனை கூட்டம் பிப்ரவரி மாதம் நடைபெற்றது.
கடந்த பிப்ரவரி 7 அன்று 6.5% இருந்த ரெப்போ வட்டி விகிதம் 6.25% ஆக குறைக்கப்பட்டு அறிவிப்பு வெளியானது. தற்போது மீண்டும் 0.25 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது கடன் பெரும் நபர்களுக்கு மிகப்பெரிய சுமையை குறைத்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கொண்டு வந்த வரிவிதிப்பு உலக பொருளாதாரத்தையே ஆடிப்போக வைத்துள்ள நிலையில், ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்துள்ள நிலையில் ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
உதாரணத்திற்கு ஒருவர் எல்ஐசியில் 36.48 லட்சம் வீட்டுக்கடன் வாங்கி இருந்தால். அவருக்கு வட்டி விகிதம் 8.25 சதவீதம் ஆகும். அவர் மாதம் 31,083 ரூபாய் EMI கட்ட நேரிடும். இதன்படி 20 வருடங்கள் வட்டியாக மட்டும் 38,12,005 ரூபாய் கட்டி இருப்பார். அசல் வட்டி சேர்த்து மொத்தமாக 74,60,005 கட்டி முடித்திருக்க கூடும். தற்பொழுது வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 25 புள்ளிகள் குறைந்துள்ளதால், விரைவில் எல்ஐசி, எஸ்பிஐ உள்பட பல்வேறு நிதி நிறுவனங்கள் வீட்டுக்கடன் வட்டி விகிதத்தை 25 சதவீதம் குறைக்க வாய்ப்பு உள்ளது.