fbpx

பெரும் இழப்பு..!! நடிகர் வடிவேலுவின் தாயார் காலமானார்..!! திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல்..!!

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 87.

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் வடிவேலு. இவர், சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு தான் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்தார். அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாவிட்டாலும் வடிவேலுவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள ’மாமன்னன்’ திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு தந்தையாக நடித்திருக்கிறார் வடிவேலு. மேலும், பி.வாசு இயக்கி வரும் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதுதவிர விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடிக்கவும் கமிட் ஆகி இருக்கிறார்.

பெரும் இழப்பு..!! நடிகர் வடிவேலுவின் தாயார் காலமானார்..!! திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல்..!!

இந்நிலையில், மதுரை விரகனூரில் வசித்து வந்த நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா நேற்று இரவு உடல்நலக்குறைவால் காலமானார். 87 வயதாகும் இவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Chella

Next Post

’ஜெ. உடலுக்கு எம்பார்மிங் செய்தது மருத்துவரோ நர்ஸோ இல்லை’..!! இவர்கள்தான்..!! ஆறுமுகசாமி பரபரப்பு தகவல்

Thu Jan 19 , 2023
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு எம்பார்மிங் செய்தது யார் என்பது குறித்து ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே பகடுப்பட்டு கிராமத்தை சேர்ந்த மறைந்த ஆர்.பி.எஃப். உதவி ஆய்வாளர் கோவிந்தராஜின் திருவுருவச் சிலை மற்றும் கல்வெட்டை அவரது குடும்பத்தார், அவர்களது குடியிருப்பு வளாகத்தில் அமைத்துள்ளனர். இதனை, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்த விசாரணை ஆணையத் தலைவர் ஆறுமுகசாமி திறந்து வைத்தார். […]
’ஜெ. உடலுக்கு எம்பார்மிங் செய்தது மருத்துவரோ நர்ஸோ இல்லை’..!! இவர்கள்தான்..!! ஆறுமுகசாமி பரபரப்பு தகவல்

You May Like