இந்திய முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் கணவர் தேவிசிங் ஷெகாவத் காலமானார். அவருக்கு வயது 89. இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்எல்ஏவும் ஆவார். இவருக்கு கடந்த இரண்டு நாட்களாக உடல்நல பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. முன்னதாகவே இவர் மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்நிலையில், புனேவில் உள்ள மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த தேவ்சிங் ஷெகாவத், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
முன்னாள் ஜனாதிபதியின் கணவர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கணவர் மறைவால் வாடும் முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். சமூகத்திற்கு பல்வேறு வழிகளில் ஆற்றிய சேவை மூலம் சமூகத்தில் தனி முத்திரை பதித்தவர் ஷெகாவத்” என்று தெரிவித்துள்ளார்.