Jasprit Bumrah: சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பே இந்திய அணி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா போட்டியில் இருந்து விலகியுள்ளார். முதுகு வலி காரணமாக ஜஸ்பிரித் பும்ரா அணியில் இருந்து விலக வேண்டியிருந்தது. பிசிசிஐ ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. இந்த செய்திக்குறிப்பில் ஜஸ்பிரித் பும்ரா சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது .ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது கடைசி டெஸ்ட் போட்டியில் காயம் அடைந்திருந்தார். முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் பும்ரா, கடைசி டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் பந்துவீசவில்லை. அதன் பின்னர் அவர், எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.
இந்தநிலையில், ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா சாம்பியன்ஸ் டிராபியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இது தவிர, சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்குப் பதிலாக வருண் சக்ரவர்த்தி அணியில் சேர்க்கப்பட்டார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி கலந்து கொள்ளும் ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெற உள்ளது. மினி உலகக் கோப்பை கிரிக்கெட் என அழைக்கப்படும் இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் கலந்து கொள்ளும் 15 பேர் கொண்ட இந்திய அணி கடந்த ஜனவரி 18-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ராவின் பெயரும் இடம் பெற்றிருந்தது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் பாகிஸ்தான், வங்கதேசம், நியூஸிலாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 20-ம் தேதி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. தொடர்ந்து 23-ம் தேதி பாகிஸ்தானுடனும், மார்ச் 2-ம் தேதி நியூஸிலாந்துடனும் பலப்பரீட்சை நடத்துகிறது.
சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில் (துணை கேப்டன்), விராட் கோலி , ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஹார்டிக் பாண்ட்யா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது. ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா மற்றும் வருண் சக்ரவர்த்தி.
Readmore: காலையில் இந்த உணவை மட்டும் சாப்பிடவே சாப்பிடாதீங்க..!! அப்புறம் ஆபத்து உங்களை தேடி வரும்..!!