பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில் யார் வெற்றி பெற போவது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ஜி. பி. முத்து, அசல் கோளாறு, ஷிவின், மணிகண்டா, அசீம், விக்ரமன், ரக்ஷிதா, தனலட்சுமி, மகேஷ்வரி, நிவாஷினி, அமுதவாணன், மைனா நந்தினி, ஜனனி, குயின்சி, ராபர்ட் மாஸ்டர், சாந்தி, ஏடிகே, ஆயிஷா, ஷெரினா, ராம், கதிரவன் உள்ளிட்ட 21 பேர் பங்கேற்றனர்.. வார இறுதியில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இந்த வார தொடக்கத்தில் 6 போட்டியாளர்கள் இருந்தனர்..

ஆனால் கதிரவன் ரூ.3 லட்சம் பணத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார்.. பின்னர் 5 போட்டியாளர் ஃபினாலே மேடையை அலங்கரிக்க இருந்த நிலையில் அமுதவாணன் 11 லட்சம் பணத்துடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.. மீதம் 4 பேர் இருந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக பிக்பாஸ் மிட் வீக் எவிக்ஷனை அறிவித்தார்.. இதில் மைனா நந்தினி வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்..
இறுதியாக விக்ரமன், அசீம், ஷிவின் ஆகிய 3 பேர் மட்டுமே உள்ளனர்.. இந்நிலையில் பிக்பாஸ் டைட்டிலை வெல்லப்போவது யார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.. இதற்கு முன்பு நடந்த சீசன்களில் யார் டைட்டில் வின்னர் என்பதை கணிப்பது எளிதாக இருந்தது.. ஆனால் இந்த சீசனில் மட்டும் தான், யார் வெற்றியாளர் என்ற எதிர்ப்பார்ப்பு கடைசி நேரம் வரை நீடிக்கிறது… நேற்று வரை விக்ரமன் மற்றும் அசீம் இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்ததாக கூறப்படுகிறது..

இந்நிலையில் எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த பிக்பாஸ் சீசனில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்பிரைஸ் கொடுக்க பிக்பாஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. ஆம்.. 2 போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் டைட்டிலை பிரித்து கொடுக்க பிக்பாஸ் குழு திட்டமிட்டுள்ளதாம்.. அதன்படி ஷிவின் கணேசன், விக்ரமன் ஆகிய இருவருமே வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.. எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று கூறுவது இந்த பிக்பாஸ் சீசன் 6 டைட்டிலை விக்ரமனும் ஷிவினும் பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.. எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.. இன்றைய எபிசோடில் யார் வெற்றியாளர் என்பது தெரிந்துவிடும்..