பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு நிவாஷினி வெளியேறினார். இந்த வாரம் நாமினேஷனில் அசீம், கதிரவன், ராபர்ட் மாஸ்டர், மணிகண்டன் உட்பட 7 பேர் தேர்வாகியுள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கமல்ஹாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால், இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால், கமல் நலம் பெற்ற வீடு திரும்பி உள்ளார்.
அதனால், இந்த வாரம் உலகநாயகன் கமல்ஹாசன் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார். முன்னதாக குறைந்த வாக்குகள் பெற்ற மணிகண்டன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகுவதாக தகவல் வெளியானது. ஆனால், ராபர்ட் மாஸ்டர் தான் உறுதியாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார். டான்ஸ் மாஸ்டர் ஆன ராபர்ட், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற வனிதா உடன் ராபர்ட் மாஸ்டர் கிசுகிசுக்கப்பட்டார். இதுகுறித்த வனிதா வெளிப்படையாகவே பல பேட்டிகளில் கூறியுள்ளார். அதாவது தன்னுடைய பட பிரமோஷனுக்காக தான் ராபர்ட் மாஸ்டரை பயன்படுத்திக் கொண்டேன் என கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து ராபர்ட் மாஸ்டர் திருமணமான சில வருடங்களிலேயே தனது மனைவி மற்றும் மகளைப் பிரிந்து வாழ்வதாக பிக்பாஸ் வீட்டுக்குள் உருக்கமாக பேசியிருந்தார். ஆனால் பிக்பாஸ் வீட்டில் இவர் ரச்சிதா உடன் எல்லை மீறி பழகுவது ரசிகர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தி இருந்தது. இதை நேரடியாக ராபர்ட் மாஸ்டரிடம் சொல்ல முடியாமல் ரச்சிதாவும் தடுமாறி வந்தார். இந்நிலையில், இந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸில் இருந்து வெளியேறுவது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.