விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 7 சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ரசிகர்களின் கவனத்தை ஈரத்த முக்கியமான போட்டியாளர் நடிகர் பிரதீப் ஆண்டனி. தமிழில் அருவி, டாடா, வாழ் உள்பட சில படங்களில் இவர் நடித்துள்ளார். கடந்த பிக்பாஸ் சீசனில் பிரதீப் ஆண்டனியால் தங்களுக்கு பிக்பாஸ் வீட்டில் பாதுகாப்பு இல்லை என்று பகீர் குற்றச்சாட்டை முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.
ரசிகர்களே கமல் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்தது ஒருதலைபட்சமாக இருந்ததாக சாடினர். இந்த ரெட் கார்டு சர்ச்சைக்கு பின்னர் கமலின் நடுநிலைத்தன்மை கேள்விக்குறியானது. இந்த நிலையில் பிரதீப் ஆண்டனி இன்று தனது காதலியை கரம் பிடித்துள்ளார். இதில் ஹைலைட் என்னவென்றால் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் தான் பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.
தற்போது அதே வாரத்தில் அதுவும் கமலின் பிறந்தநாள் அன்று பிரதீப் கல்யாணம் செய்து இருக்கிறார். கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி பிரதீப் ஆண்டனிக்கும், அவரது நீண்ட நாள் காதலி பூஜாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து இவர்களின் திருமணம் இந்து, கிறிஸ்தவ ஆகிய இரு முறைப்படியும் இன்று நடைபெற்று முடிந்துள்ளது.
முன்னதாக, இன்று காலை பட்டு வேட்டி சட்டை அணிந்து பிரதீப் ஆண்டனியின் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார் சுரேஷ் சக்கரவர்த்தி. அப்போது அவருக்கு இந்து முறைப்படி திருமணம் நடந்துள்ளது. இதைத்தொடர்ந்து சில மணி நேரங்கள் கழித்து சர்ச்சில் வைத்து கிறிஸ்தவ முறை திருமணம் நடந்துள்ளது. இதில் கோட் சூட் உடன் பிரதீப் ஆண்டனி இருக்கிறார்.
Read more ; பெற்றோர்களே எச்சரிக்கை!!! மிட்டாய் சாப்பிட்டு உயிரிழந்த குழந்தை..