கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி தொடங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 21 பேர் பங்கேற்றார்கள் அப்படி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி யில் இறுதியில் ஒரு வெற்றியாளர் மட்டுமே தேர்வு செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி இந்த வீட்டின் இந்த சீசனின் வெற்றியாளராக அசீம் சில நாட்களுக்கு முன்னர் தேர்வு செய்யப்பட்டார்.
அந்த விதத்தில், இந்த வீட்டில் போட்டியாளர்களாக பங்கேற்ற ஜனனி, ஆயிஷா உள்ளிட்ட இருவருக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தது. ஜனனி இந்த வீட்டை விட்டு வெளியேறும் போது எந்த அளவிற்கு ரசிகர்கள் வருத்தப்பட்டார்களோ, அதே அளவிற்கு ஆயிஷா இந்த வீட்டை விட்டு வெளியேறிய போதும் வருத்தத்திற்கு உள்ளானவர்கள்.

அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதில் குடி கொண்டிருந்தார் ஆயிஷா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சத்யா என்ற தொடரின் மூலமாக தமிழக மக்களின் மனதை ஈர்த்தவர் தான் நடிகை ஆயிஷா. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கிட்டு கொண்டு 50 நாட்களுக்கு மேல் அந்த வீட்டில் இருந்தார்.
இவர் தற்சமயம் தன்னுடைய காதலன் யார் என்று அறிவிக்க இருப்பதாக கூறி இருக்கிறார் இந்த நிலையில் தன்னுடைய காதலனின் முகத்தை காட்டாமல் அவருடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை மட்டும் வெளியிட்டுள்ளார்.