விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது ஆரம்பிக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த முறை இரண்டு வீடுகள் என்பதால் இரு பிரிவினராகவே போட்டியாளர்கள் இருந்து வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் வீட்டு தலைவரை குறைவாக கவர்ந்த போட்டியாளர்களை 2-வது வீடான ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இதனை தொடர்ந்து ஜோவிகா அதிகமான சாப்பாட்டை வீணாக்குவதால் இனி சமைக்க போறது இல்லை என ஸ்மோல் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் முடிவு செய்துள்ளார்கள். இதனால் ஜோவிகாவுக்கும் பிரதீப்புக்கும் இடையில் ஒரு பயங்கர சண்டை வெடித்துள்ளது.
இதனால் ஜோவிகா பிரதீப்பை ஆமாண்டா நான் அப்பிடித்தான் செய்வேன், நீ மூன்று நேரமும் சமைத்துதான் தரவேண்டும் என மரியாதை குறைவாக பேசியிருக்கின்றார். இது தான் இரண்டாவது ப்ரோமோவில் வெளிவந்திருக்கிறது.