fbpx

ஆளில்லா நேரத்தில் காருக்கு நலங்கு வைத்த பிக்பாஸ் நித்யா..!! கடுப்பான கணவர் தாடி பாலாஜி..!! நடந்தது என்ன..?

எதிர்வீட்டில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியரின் காரை சேதப்படுத்திய வழக்கில் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவை போலீசார் கைது செய்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் நடிகர் தாடி பாலாஜி. இவரது மனைவி நித்யா. இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ள நிலையில், தாடி பாலாஜியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நித்யா பிரிந்து சென்றார். பின்னர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கணவர் தாடி பாலாஜியுடன் சேர்வது போல நடித்த நித்யா, உண்மையில் சேர்ந்து வாழாமல் மாதவரம் பொன்னியம்மன் மேடு 2 வது தெருவில் தனது மகளுடன் தனியாக வசித்து வருகின்றார். இந்நிலையில், தனது வீட்டின் எதிரே கார் நிறுத்துவது தொடர்பாக நித்தியாவுக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியரான மணி என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று காலையில் ஆசிரியர் மணியின் காரில் சரமாரியாக கோடு கிழிக்கப்பட்டிருந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மணி, அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது இரவு நேரத்தில் கையில் கல் எடுத்து வந்து காரை சேதப்படுத்தியது தாடி பாலாஜியின் மனைவி நித்யா என்பது தெரியவந்தது. இதையடுத்து, மணி அளித்த புகாரின் பேரில் நித்யாவை கைது செய்த மாதவரம் போலீசார், அவரது குழந்தையின் நலன் கருதி இனி இது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்து அவரை காவல்நிலைய ஜாமீனில் விடுதலை செய்தனர். மது போதையில் கணவர் பாலாஜி, தன்னிடம் ஆத்திரக்காரணாக நடந்து கொண்டதாக கூறி வீடியோ வெளியிட்டு கணவரை பிரிந்த நித்யா, ஆத்திரத்தில் கையில் எடுத்த கல், அவரை கிரிமினல் வழக்கில் சிக்க வைத்துள்ளது.

Chella

Next Post

’தாத்தா என்னை விட்ருங்க’..!! 9ஆம் வகுப்பு மாணவியை கடைக்குள் வைத்து கற்பழித்த 62 வயது முதியவர்..!!

Sun Jan 29 , 2023
9ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 62 வயது முதியவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகாவில் இருக்கும் ஏரவாடி வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் (62). இவர் அதே பகுதியில் பலகார கடை நடத்தி வருகிறார். இவரின் கடைக்கு ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் பலகாரம் வாங்க வந்துள்ளார். அப்போது, அந்த மாணவியை கடைக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் […]

You May Like