பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் இரட்டைவால் குருவி, பாசமலர், சின்னத்தம்பி, ராசாத்தி என்று பல்வேறு தொடர்களில் நடித்து வந்தவர் பாவனி. அதன் பிறகு கடந்த 2021 ஆம் வருடம் பிக் பாஸ் சீசன் 5ல் பங்கேற்றுக்கொண்ட பிறகு அவர் மக்களின் ஆதரவை வெகுவாக பெற்றார்.
அந்த நிகழ்ச்சி மூலமாக அவருக்கு மிகப்பெரிய ஆதரவு மக்களிடையே கிடைத்தது. ஆகவே அவர் தன்னுடைய காதலனை தேர்வு செய்தார். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பிறகு அமீரை காதலிப்பதாக தெரிவித்து இருவரும் ஒன்றாக ஊர் சுற்றி வந்தனர். இருவரும் இணைந்து தற்போது வெளியான ஒரு திரைப்படத்திலும் கூட நடித்திருக்கிறார்கள்.
சமீபத்தில் நடிகை பாவணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரசிகர் உங்களுக்கும் அமீருக்கும் திருமணம் முடிந்தது என்பதை ஏன் தெரிவிக்கவில்லை? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு பதில் அளித்த பாவனி சென்ற மாதம் நான் கர்ப்பமாக இருப்பதாக நீங்களே முடிவு செய்தீர்கள் அதன் பிறகு நாங்கள் இருவரும் உயிரிழந்து விட்டதாக சொன்னார்கள். தற்போது நாங்கள் ரகசியமாக திருமணம் செய்து கொண்டோம் என்று சொல்கிறார்கள். அடுத்து என்ன? என்று பாவனி கேள்வி எழுப்பி உள்ளார்.