fbpx

பிக்பாஸ் சீசன்7!… டைட்டிலை தட்டித்தூக்கிய அர்ச்சனா!… சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் வைல்டு கார்டு ரவுண்டில் உள்ளே வந்து, பிக்பாஸ் சீசன் 7 தமிழுக்கான டைட்டிலை வென்ற முதல் போட்டியாளராக அர்ச்சனா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7ஆவது சீசன் கிட்டத்தட்ட அதன் கிளைமாக்ஸை நெருங்கியது. ஏற்கனவே எலிமினேட்டாகி வெளியே சென்ற பலரும் இந்த வாரம் வீட்டிற்குள் வந்து தங்களது முன்னாள் போட்டியாளர்களுடன் விளையாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திவிட்டு, பிக்பாஸின் ஆணைக்கிணங்க வெளியில் புறப்பட்டனர். இந்நிலையில் மணி, அர்ச்சனா, தினேஷ், மாயா, விஷ்ணு ஆகியோர் இறுதியாக பிக்பாஸ் வீட்டில் இருந்தனர். இவர்களுக்கு இடையே போட்டி கடுமையாக இருந்தது. வாக்கு பங்களிப்பும் கடுமையாக இருந்தது.

இந்நிலையில் ஜனவரி 13ஆம் தேதியான நேற்று அதற்குண்டான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் அர்ச்சனா அதிக வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் சீசன் 7 தமிழின் டைட்டில் வின்னர் ஆனார். இதை தொடர்ந்து 2வது இடத்தி; மணி தேர்வாகி இருப்பதாகவும் மூன்றாவது இடத்தில் மாயா இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வைல்டு கார்டு ரவுண்டில் வந்து முதன்முதலாக, தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் ஒரு போட்டியாளர் முதன்முறையாக டைட்டில் வின்னர் ஆனது இதுவே முதல்முறை. இதற்கான அறிவிப்பு நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு விஜய் டிவியில் பிரமாண்டமாக ஒளிபரப்பாகிறது. இந்நிலையில் தற்போது பிக் பாஸ் தமிழ் 7 வெற்றியாளருக்கு ரூ.50 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி டைட்டில் வின்னரான அர்ச்சனாவுக்கு ரூ.50 லட்ச தொகை வழங்கப்படுகிறது.

Kokila

Next Post

அயோத்தியின் உருமாற்றத்திற்கு பின்னால் இருக்கும் நபர்..! சுற்றுலா, தொழில்துறையில் அயோத்தி வளர்ச்சி பெறும்!…

Sun Jan 14 , 2024
சுற்றுலா, தொழில்துறையில் அயோத்தி வளர்ச்சி பெற எங்களிடம் மாஸ்டர் பிளான் ஒன்று உள்ளது என்று மாவட்ட கமிஷ்னர் கௌரவ் தயாள் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் எதிர்பார்த்து காத்திருக்கும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதற்காக அயோத்தி நகரமே விழா கோலமாக காட்சியளிக்கிறது. பல்வேறு தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கு ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கும்பாபிஷேகத்தன்று பொதுமக்கள் அனைவரும் வீட்டில் […]

You May Like