தமிழ் ரியாலிட்டி ஷோக்களில் மிகப்பெரிய புகழை பெற்றிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் தேதி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே வீட்டில் எவ்வித வெளியுலக தொடர்பும் இல்லாமல் 60 கேமராக்களுக்கு முன்னால், பிரபலங்கள் வாழும் 100 நாட்களை படமாக்கி ரசிகர்களை கவர்ந்தது. முதல் சீசனில் இருந்து கடைசி சீசன் வரை ஒவ்வொரு வகையில் வித்தியாசம் காட்டி காட்டப்பட்டு வந்தது. இந்நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய பலமாக இருந்ததே கமல்ஹாசன் தான்.
ஆனால், இந்த சீசனில் அவர் இல்லை. சினிமா காரணமாக தற்காலிகமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகியுள்ளார் கமல். அவருக்கு பதிலாக இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். இதனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்னும் எகிறியுள்ளது. இதற்கான புரோமோக்களும் வெளியிடப்பட்டு விட்டது.
கடந்த சீசன் மிகப்பெரிய தோல்வி என தான் கூற வேண்டும். அதில் நடந்த ஏகப்பட்ட குளறுபடிகளால் தான் கமலும் வெளியேறியதாக ஒருபக்கம் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த புதிய மாற்றங்களால் மேலும் பல புதிய முயற்சிகள் நிகழ்ச்சிக்குள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் சீசன் முதல் எபிசோட்டான அறிமுக விழா அக்டோபர் 6ஆம் தேதி ஒளிபரப்பாக இருப்பதாக விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Read More : 30 துண்டுகளாக இளம்பெண்ணின் உடல்..!! உறுப்புகளை இணைத்து போஸ்ட் மார்ட்டம்..!! பெங்களூருவை உலுக்கிய கொலை..!!