fbpx

பிக்பாஸ் சென்ற முதல் நாளே ஐசியூ..!! வெளியே வந்ததும் மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த ரவீந்தர்..!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த ரவீந்தர் முதல் ஆளாக எலிமினேஷன் ஆகி வெளியே வந்திருக்கிறார்.

ரவீந்தர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு முக்கியமான போட்டியாளராக இருந்தார். எல்லா சீசன்களையும் அவர் ரிவ்யூ செய்ததால், இந்த நிகழ்ச்சியை பற்றிய நன்கு புரிதலோடு அவர் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதனாலயே கண்டன்டுக்கு பஞ்சம் இல்லாமல் அவரால் என்ன செய்ய முடியுமோ அதை சிறப்பாக செய்து கொண்டு வந்தார். ஆனால், அவரால் பிசிகல் டாஸ்க் சரியாக விளையாட முடியவில்லை.

நடக்கும்போதே மூச்சு வாங்கும் ரவீந்தர், பிசிகல் டாஸ்க் எப்படி செய்வார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனாலும், முதல் முறையாக அந்த வீட்டிற்குள் நடந்த டாஸ்க்கில் ஓடி கால் வலியும் வந்திருந்தது. அப்போது கூட அவர் நான் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதான் ஓடி இருக்கிறேன். எனக்கு ஓடுவதற்கு தெரியும் என்பதே இப்போதுதான் தெரிகிறது என்று கூட அவர் விளையாட்டாக சொல்லியிருந்தார்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ரவீந்தர், நாளையில் இருந்து நான் வழக்கம் போல ரிவ்யூ தொடங்கி விடுவேன் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு முன்னோட்டமாக நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவில் பேசியிருந்தார். அப்போது ”நான் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற முதல் நாள் தான் என்னுடைய அப்பாவுக்கு ஆபரேஷன் நடைபெற்றது.

என்னுடைய அப்பாவை ஐசியூவில் சென்று நான் பார்க்காமல் தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போனேன். அவருக்கு நான் பிக்பாஸுக்கு போவது ரொம்பவே சந்தோஷம். ஆனால், அவர் ஹாஸ்பிடலில் இருந்து வீடு வந்து சேர்வதற்குள் என்னை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அனுப்பி விட்டார்கள். இதை நான் எதிர்பார்க்கல. ஆனாலும் எனக்கு ஆதரவு தந்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. நான் நாளையில் இருந்து ரிவ்யூ கொடுக்கிறேன்” என்று அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.

Read More : இந்த வெங்காயத்தை சாப்பிட்டால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்..!! இனியாவது உஷாரா இருங்க..!!

English Summary

Bigg Boss went to ICU on the first day..!! After coming out, Ravinder started the game again..!!…

Chella

Next Post

போதிய பயணிகள் இல்லை... சென்னையில் இருந்து புறப்படும் 6 விமானங்கள் ரத்து..!!

Wed Oct 16 , 2024
Due to lack of passengers, 6 flights scheduled to depart from Chennai on Wednesday have been cancelled.

You May Like