fbpx

லோக்சபா தேர்தலையொட்டி திட்டமிடப்பட்ட மிகப்பெரிய நக்சலைட்டு தாக்குதல்…! சரியான நேரத்தில் முறியடித்த காவல்துறை..!

மகாராஷ்டிராவில் நக்சலைட்டுகளின் மிகப்பெரிய குண்டுவெடிப்பு தாக்குதலை காவல்துறை தடுத்துள்ளது. வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஆறு பிரஷர் குக்கர்கள், வெடிபொருட்கள், டெட்டனேட்டர்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரா மாநிலம் திபாகட் பகுதியில் வெடி மருந்து பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக உளவுத்துறை மூலம் கிடைத்த தகவலின் பேரில், மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் மற்றும் 2 வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர் குழுக்களின் உதவியுடன் அங்கு சோதனை நடத்தப்பட்டது. மக்களவைத் தேர்தலை சீர்குழைக்கும் நோக்கில் திட்டமிட்டு நக்சலைட்டுகள் அப்பகுதியில் வெடிமருந்துகளை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் அப்பகுதியிலிருந்து 9 ஐஇடி வகை வெடிகுண்டுகளும், வெடிபொருட்கள் மற்றும் டெட்டனேட்டர்கள் நிரப்பப்பட்ட 6 பிரஷர் குக்கர்களும், வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்ட 3 கிளைமோர் குழாய்களும் கண்டெடுக்கப்பட்டன. மீதமுள்ள 3 கிளைமோர் குழாய்கள் வெடிபொருட்கள் ஏதுமில்லாமல் இருந்தன என்று கட்சிரோலி எஸ்பி நீலோட்பால் கூறியுள்ளார். மேலும் அதே இடத்தில் ஒரு பிளாஸ்டிக் பையில் நிரப்பப்பட்ட துப்பாக்கி குண்டுகள், மருந்துகள் மற்றும் போர்வைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையில், 9 ஐஇடி வெடிகுண்டுகள் மற்றும் மூன்று கிளைமோர் குழாய்கள் அந்த இடத்திலேயே அழிக்கப்பட்டன.

Read More: “உன்னை நேரில் சந்திக்க ஆவலாக இருக்கிறேன்..” –  10 வயது சிறுவனுக்கு உதவ முன்வரும் ஆனந்த் மஹிந்திரா!

Rupa

Next Post

நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது இ-பாஸ் நடைமுறை... 21,446 வாகனங்களுக்கு அனுமதி...

Tue May 7 , 2024
நீலகிரி மாவட்டத்திற்குள் நுழைய இன்று நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம். பிரத்யேக இணையதளத்தில் பதிவு செய்ததில் தற்போது வரை 21,446 வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் 2.78 லட்சம் பேர் பயணிக்க உள்ளனர். தமிழகத்தில் கோடை காலங்களில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானலில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இப்படி கோடை காலங்களில் […]

You May Like