fbpx

மிகப்பெரிய நெட்வொர்க்..!! 14,190 இளம்பெண்கள்..!! வேலைத்தேடும் பெண்களே உஷார்..!!

தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் வாட்ஸ் ஆஃப் மூலம் விபச்சாரம் நடைபெறுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. விபசாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த ஹைதராபாத் ஆணையர் ஸ்டீபன் ரவீந்திரா, “தெலுங்கானாவின் பேகம் பேட்டையை சேர்ந்தவர் முகமது சல்மான்கான் என்கிற சமீர். இவர் முதலில் ஓட்டல் ஒன்றில் ஊழியராக வேலை செய்தார். அப்போது விபச்சார கும்பலால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஓட்டலில் தங்குவதை கவனித்த அவர், சுலபமாக பணம் சம்பாதிக்க இது சிறந்த வழி என முடிவு செய்துள்ளார். போதைப்பொருள் பழக்கம் உள்ள சமீருக்கு போதைப்பொருள் விற்பனை செய்யும் ஆர்னவ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் கூட்டாக சேர்ந்து கடந்த 2016இல் விபச்சார விடுதி நடத்த ஆரம்பித்தனர். இவர்களோடு மொத்தம் 17 பேர் முக்கிய அமைப்பாளர்களாக வேறு வேறு மாநிலங்களில் ‘வாட்ஸ் அப்’ குழுக்கள் மூலம் இதை நடத்தி வந்தனர்.

மிகப்பெரிய நெட்வொர்க்..!! 14,190 இளம்பெண்கள்..!! வேலைத்தேடும் பெண்களே உஷார்..!!

ஒவ்வொரு ‘வாட்ஸ் அப்’ குழுவிலும் தலா 300 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் மூலம் மொத்தம் 14,190 இளம்பெண்களுடன் விபச்சார விடுதிகளை நடத்தியுள்ளனர். நாடு முழுவதும் உள்ள இவர்களது ஹைடெக் விபச்சார தொழில் தற்போது வெளிச்சத்துக்கு வந்தது. வேலை வாங்கி தருவதாக கூறி அப்பாவி பெண்களை புகைப்படம் எடுத்து அவற்றை ‘வாட்ஸ்அப்’ குழு மூலமாக அனுப்பி வைப்பார்கள். அவற்றை பார்க்கும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பெண்களை தேர்ந்தெடுத்து கால் சென்டர்களுக்கு தகவல் தெரிவிப்பார்கள். கால் சென்டர் ஊழியர்கள் குறிப்பிட்ட தங்கும் விடுதியில் விபச்சார அழகி இருப்பார் என்றும், அவருக்கு இவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்றும் கூறி ஒரு தொகையை ஆன்லைன் மூலமாக வாங்கிக்கொள்வார்கள்.

மிகப்பெரிய நெட்வொர்க்..!! 14,190 இளம்பெண்கள்..!! வேலைத்தேடும் பெண்களே உஷார்..!!

அந்த பணத்தில் 30 சதவீதம் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்ணுக்கும், 35 சதவீதம் அந்தப்பெண்களின் படங்களை விளம்பரம் செய்பவர்களுக்கும் கால் சென்டர் பிரதிநிதிகளுக்கும் கொடுப்பார்கள். எஞ்சிய 35 சதவீத பணத்தை நிர்வாகிகள் பங்கிட்டு கொள்வார்கள். விபச்சாரத்திற்கு பெண்களை கேட்கும் ஆண்களுடன் பேசுவதற்காக நிர்வாகிகள் ஹைதராபாத், டெல்லி, பெங்களூரு ஆகிய இடங்களில் கால் சென்டர்களை ஏற்பாடு செய்துள்ளனர். ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்காளம், கர்நாடகா, மராட்டியம், டெல்லி, கொல்கத்தா, அசாம் மாநில பெண்களோடு தாய்லாந்து, நேபாளம், வங்காளதேசம், பாகிஸ்தான், ரஷ்ய நாட்டு பெண்களையும் வைத்து கூட இவர்கள் விபச்சாரம் நடத்தியுள்ளனர். வெளிநாட்டு பெண்களுக்கு போலி பாஸ்போர்ட்டுகள் ஆதார் கார்டுகளை தயாரித்து இவர்களை இந்தியா முழுவதிலும் உள்ள நகரங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்” என்று ஆணையர் கூறினார்.

Chella

Next Post

#திருச்சி: ஒன்றறை வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை..!

Thu Dec 8 , 2022
திருச்சி மாவட்ட பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் கூலி வேலை செய்து வருகிற ராமராஜ் (31) என்பவருக்கு திருமணம் ஆகிய நிலையில் ஒன்றறை வயதில் பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். நாள்தோறும் கஞ்சா மற்றும் மதுபோதையில் வீட்டுக்கு வருவதையே வழக்கமாக கொண்டிருந்தார் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஒருநாள் இரவு தனது குழந்தையின் அருகில் படுத்து உறங்கியுள்ளார். இதன் பிறகு சற்று நேரத்தில் குழந்தை அழ தொடங்கியது . […]

You May Like