ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தி ஆவின் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது..
பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.. அதன்படி இந்த உணவுப் பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது.. இதன் காரணமாக தற்போது தயிர் மற்றும் நெய் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தி உள்ளது.. அதன்படி, 100 கிராம் தயிர் விலை 10 ரூபாயில் இருந்து 12 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.. இதே போல் 200 கிராம் தயிர் விலை 25 ரூபாயில் இருந்து 28 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட அரை லிட்டர் தயிர் 30 ரூபாயில் இருந்து 35 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது..
பிரீமியம் தயிர் ஒரு லிட்டரின் விலை 100 ரூபாயில் இருந்து 120 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.. ஒரு லிட்டர் நெய் விலை 535 ரூபாயில் இருந்து 580 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.. அரை லிட்டர் நெய் 275 ரூபாயில் இருந்து 290 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.. எனினும் ஆவின் பால் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.. இந்த விலை உயர்வு ஜூலை 21, அதாவது இன்று முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது..