10ஆம் வகுப்பு மாணவியை ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்று 5 ஆண் நண்பர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லி குரு கிராம் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஓட்டலுக்கு 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசைவார்த்தைக் கூறி அவரது ஆண் நண்பர்கள் இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், ஓட்டல் அறைக்குச் சென்றதும் அங்கு மேலும் 3 பேர் இருந்துள்ளனர். இதனைப் பார்த்து அந்த மாணவி அதிர்ச்சி அடைந்தார். பின்னர், 5 பேரும் சேர்ந்து அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதற்கிடையே, சனிக்கிழமை மதியம் 12.30 மணிக்கு பூங்காவுக்கு செல்கிறேன் என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டு மாணவி வெளியே சென்றுள்ளார். இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் பல இடங்களில் தேடிப் பார்த்து உள்ளனர். இரவு முழுவதும் தேடிப் பார்த்தும் மகள் கிடைக்காததால் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டின் அருகே மகள் உட்கார்ந்திருப்பது கண்டிருக்கிறார்கள். இரவு முழுவதும் எங்கே சென்றாய் என்று சத்தம் போட்டு கேட்டிருக்கிறார்கள். அப்போது அந்த மாணவி அழுது கொண்டே நடந்ததை சொல்லி இருக்கிறார். தன்னுடன் படித்த இரண்டு நண்பர்கள் ஓட்டலுக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு 5 பேர் தன்னை பலாத்காரம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இதை வெளியே யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி, வீட்டின் அருகே விட்டுச் சென்றுள்ளனர்.
இதையடுத்து, பெற்றோருடன் அந்த மாணவி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், 5 பேர் மீதும் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். இதில், இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மூவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.