லைசன்ஸே இல்லாமல், பைக் ரைடு சென்றது எப்படி என நடிகை மஞ்சு வாரியரை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் மஞ்சு வாரியர். இவர் தற்போது கேரள மாநிலம் கொச்சி, காக்காநாடு பகுதியில் உள்ள ஆர்.டி.ஓ-விடம் தன்னுடைய பைக்கை ஓட்டிக்காட்டி லைசென்ஸ் பெற்றுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. தற்போது இந்த விவகாரம் மஞ்சு வாரியருக்கு புதிய பிரச்சனையை கொடுத்துள்ளது. துணிவு படப்பிடிப்பின் போது நடிகர் அஜித், லடாக் பகுதியில் பைக் ரைடு சென்றார். அவருடன் நடிகை மஞ்சு வாரியரும் பைக் ரைடு சென்ற புகைப்படங்கள் வைரலானது. தற்போது இதை குறிப்பிட்டு தான் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். லைசன்ஸே இல்லாமல் அஜித்துடன் பைக் ரைடு சென்றது எப்படி என நடிகை மஞ்சு வாரியரை கேள்வி எழுப்பி வருகின்றனர்.

டிரைவிங் லைசென்ஸ் என்ற மலையாள படத்தில், வெள்ளத்திரையில் ஜொலிக்கும் மெகா நடிகர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த பிரித்விராஜ், லைசென்ஸ் வாங்குவதற்காக ஆர்டிஓ அலுவலகத்திற்கு செல்வார். அப்போது பத்திரிகையாளர்கள், பிரித்விராஜிடம் லைசென்ஸ் எடுக்காமல்தான் படத்தில் கார் ஓட்டுவது போன்ற காட்சிகளில் நடித்தீர்களா? என கேள்வி எழுப்புவதுபோன்ற காட்சி அமைந்திருக்கும். டிரைவிங் லைசென்ஸ் படத்தில் இடம்பெற்ற இந்த காட்சியை போன்றே, தற்போது நிஜத்திலும் டிரைவிங் லைசென்ஸ் வாங்கியுள்ள நடிகரை மஞ்சுவாரியரை நெட்டிசன்கள் பல்வேறு கேள்விகளுடன் TROLL செய்து வருகின்றனர். இப்போது தான் லைசென்ஸ் வாங்கும் மஞ்சு வாரியர், எப்படி அஜித் உடன் இணைந்து பைக் ஓட்டினார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேநேரத்தில் போக்குவரத்து விதிகளை பின்பற்றி தற்போதாவது லைசன்ஸ் எடுத்துள்ளாரே என்றும் ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.