fbpx

ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள்..!! சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றம்..!!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று கூடிய நிலையில், ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

முந்தைய அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள், தற்போதைய திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்கள் என மொத்தம் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்திவைப்பதாக குறிப்பிட்டு, அதனை ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த 13ஆம் தேதி திருப்பி அனுப்பினார். இதில், பல்கலைக்கழக வேந்தர்களாக முதலமைச்சரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே, சில மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்காக சட்டப் பேரவை சிறப்பு கூட்டம் இன்று கூட்டப்பட்டது. இந்த கூட்டத்தில், 10 மசோதாக்காளை நிறைவேற்றுவதற்கான தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், 10 மசோதாக்களை காரணம் எதையும் குறிப்பிடாமல், அனுமதி அளிப்பதை நிறுத்தி வைத்திருப்பதாகத் தெரிவித்து, ஆளுநர் திருப்பி அனுப்பியது ஏற்புடையது அல்ல என்று தெரிவித்தார்.

அரசியல் சாசன சட்டப்பிரிவு 200-ன்கீழ், மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் போது, அதற்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் என்று பேசினார். இதனைத் தொடர்ந்து, ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றித் தருமாறு அந்தந்த துறை அமைச்சர்கள் முன்மொழிந்தனர். அதன்படி, அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு மீன்வள பல்கலைக் கழக மசோதா, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக மசோதா ஆகியவை மீண்டும் தாக்கல் செய்யப்பட்டன.

இதேபோல, திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு பல்கலைக் கழகங்கள் மசோதா, டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக மசோதா, டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழக மசோதா, வேளாண்மை பல்கலைக் கழக மசோதா, தமிழ்நாடு பல்கலைக் கழகங்கள் இரண்டாவது திருத்த மசோதா, தமிழ் பல்கலைக் கழக இரண்டாவது திருத்த மசோதா, மீன்வள பல்கலைக் கழக மசோதா, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக மசோதா ஆகியவை தாக்கல் செய்யப்பட்டு மீண்டும் நிறைவேற்றப்பட்டன. இதற்கிடையே, பேரவையில் இருந்து பாஜக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், 10 மசோதாக்காளும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

Chella

Next Post

’உன்ன நம்பி தான் இதுக்கு சம்மதிக்கிறேன்’..!! ஆடு மேய்க்க சென்ற சிறுமியை அம்மாவாக்கிய நபர்..!!

Sat Nov 18 , 2023
கரூர் மாவட்டம் குரும்பபட்டியை அடுத்த ஒலிகரட்டூரில் 9ஆம் வகுப்பு வரை படித்துள்ள சிறுமி, வீட்டில் இருக்கும் ஆடுகளை மேய்ச்சலுக்காக அருகில் உள்ள காட்டிற்கு அழைத்துச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்போது அதே கிராமத்தில் வசிக்கும் மகேஷ் என்கின்ற மகேஷ்வரன் (வயது 40) அதே காட்டில் ஆடு மேய்க்க வந்துள்ளார். அப்போது, சிறுமியை காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார். பிறகு திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடந்த 2021ஆம் ஆண்டு […]

You May Like