fbpx

உயிரியல் பயங்கரவாதம்!… கோவிட்19 என்ற உயிர் ஆயுதத்தை சீனா வேண்டுமென்றே உருவாக்கியது!… வூகான் ஆராய்ச்சியாளர்!

மக்கள் பாதிப்படையவேண்டும் என்ற நோக்கில் கோவிட் 19 என்ற உயிர் ஆயுதத்தை சீனா வேண்டுமென்றே உருவாக்கியதாக வூகான் ஆராய்ச்சியாளர் அதிர்ச்சி தகவலை அளித்துள்ளார்.

சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவத் தொடங்கியது. ஏராளமான மக்களை பாதித்து உயிர்களை பறித்த அந்த வைரஸ் இந்தியா உட்பட மற்ற உலக நாடுகளையும் மிகப்பெரிய அளவில் பாதித்தது.சீனாவில் முதன்முதலில் இந்த கொரோனா வைரஸ் வூகான்ன் நகரத்தையே தாக்கியதாகவும், அங்குள்ள ஆய்வுக் கூடம் ஒன்றில் இந்த வைரஸ் குறித்து ஆராய்ச்சியாளர்கள் பரிசோதனை செய்துகொண்டு இருந்தபோது அது வெளியேறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டது. அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் பல இந்த குற்றச்சாட்டை முன்வைத்தன. சிலர் இதனை சீனா வைரஸ் என்றே அழைக்கத் தொடங்கினர். சீனா அரசாங்கம் இதற்கு மறுப்பு தெரிவித்து வந்தது.

இந்தநிலையில், வூகான் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த சாவோ ஷாவோ என்ற ஆராய்ச்சியாளர், சர்வதேச செய்தியாளர் சங்க உறுப்பினர் ஜெனிஃபர் என்பவருக்கு அளித்த பேட்டியில், கொரோனா வைரஸ் சீனாவின் உயிரி ஆயுதம் என்று தெரிவித்தார். கொரோனா பரவத் தொடங்கிய 2019ம் ஆண்டில் மேலதிகாரி ஒருவர் கொரோனா வைரஸின் 4 திரிபுகளை தனது நண்பர்களிடம் கொடுத்து அதில் எது அனைத்து உயிரினங்களிலும் எளிதாக பரவக்கூடியது என கண்டறிய சொன்னதாக அவர் கூறியுள்ளார். 2019ல் சீனாவில் நடைபெற்ற ராணுவ விளையாட்டு போட்டியில் பங்கேற்க வந்த பல்வேறு நாடுகளின் வீரர்களின் உடல்நிலையை பரிசோதிக்க சாதாரண மருத்துவர்கள் அனுப்பப்படாமல் வைரஸ் ஆராய்ச்சியாளர்கள் அனுப்பப்பட்டதாகவும் வீரர்களுக்கு கொரோனா வைரஸை பரப்பவே அவர்கள் அனுப்பப்பட்டிருக்கலாம் என்றும் சாவோ ஷாவோ தெரிவித்துள்ளார். ஆராய்ச்சியாளரின் இந்த பேட்டி உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Kokila

Next Post

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வைத்து விற்பனை...! புது புகாரை தெரிவிக்கும் விற்பனையாளர்கள்...!

Thu Jun 29 , 2023
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வைத்து விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்தது மது அருந்துவோர் மத்தியில் மகிழ்ச்சியையும், விற்பனையாளர் மத்தியில் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி கடந்த வாரம் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் . அப்போது டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மது விற்பனை நடப்பதாக பல புகார்கள் வந்துள்ளன. சமீபத்திய புகார்களை […]

You May Like