fbpx

”பறவை கழிவுகளால் உயிருக்கே ஆபத்து”..!! ”இந்த இடத்தில் யாரும் இருக்காதீங்க”..!! எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்..!!

பறவைகள் வளர்ப்பதில் சிலருக்கு ஈடுபாடு உண்டு. சிலர் கிளிகளை வளர்ப்பார்கள். சிலர் மாக்காவ் என்று சொல்லக்கூடிய பஞ்சவர்ண கிளிகளை வளர்ப்பார்கள். இவை விலை உயர்ந்தவை என்று கருதுபவர்கள் கூண்டுகளில் லவ் பேர்ட்ஸ் (Love Birds) வளர்ப்பார்கள். இதெல்லாம் ஒரு ஹாபி. ஆனால், பறவை வளர்ப்பில் ஈடுபாடு கொண்டவர்கள் வெகு நிச்சயமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உண்டு.

அது என்னவென்றால், பறவை வளர்ப்பில் ஆசைப்படும் முன்பு தங்களுக்கு ஆஸ்துமா இருக்கிறதா என்பதை ஒருமுறை சோதித்துக் கொள்வது அவசியம். ஏனெனில், பறவை எச்சங்கள் மற்றும் பறவைகளின் தூவிகள் போன்ற மிக மெல்லிய சிறகுகள் காற்றில் பறந்து வந்து நமது சுவாசமண்டலத்தை தாக்க வல்லவை என சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதற்கு உதாரணமாக நடிகை மீனாவின் கணவர் மரணத்தையே எடுத்துக் கொள்ளலாம். அவரது இறப்புக்கு காரணம் புறாக்களின் எச்சங்களால் பரவிய நுரையீரல் நோய்த்தொற்று என்கிறார்கள் மருத்துவர்கள்.

இந்நிலையில், சென்னை குரோம்பேட்டை பகுதியில் உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்குச் சர்வதேச அளவில் புகழ்பெற்ற மருத்துவமனை ஒன்று இருக்கிறது. இங்கே Interstitial Lung Disease எனப்படும் ஐஎல்டி நோயால் பாதிக்கப்பட்ட குஜராத்தை சேர்ந்த திம்பால் ஷா (42) என்ற பெண் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஐஎல்டி நோயால் இவரது நுரையீரல் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவருக்குக் கடினமான மிகவும் சிக்கலான இரட்டை நுரையீரல் உறுப்பு மாற்றுச் சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. தேவையான அனைத்து மருத்துவ சோதனைகளும் செய்யப்பட்ட நிலையில், அதன் பிறகு சமீபத்தில் தான் அந்த பெண்ணுக்கு இந்த ஆப்ரேஷன் செய்யப்பட்டது. பல மணி நேரம் நடைபெற்ற ஆப்ரேஷனை மருத்துவர்கள் வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

இது குறித்து மருத்துவமனையின் சேர்மன் பேராசிரியர் முகமது ரேலா கூறுகையில், “நாம் வாழும் சுற்றுச்சூழல் ரொம்பவே முக்கியம். பறவை கழிவுகளால் மோசமான ஆபத்துகள் ஏற்படும். ஆண்டுக் கணக்கில் பறவைகள் கழிவுகள், எச்சங்கள், தூசி அதிகம் இருக்கும் இடங்களில் வாழும் நபர்களுக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்படும். அதுவும், சரிசெய்யவே முடியாத அளவுக்கு மோசமான பாதிப்பு ஏற்படும். மிகை உணர்திறன் மூச்சுப்பை அழற்சி, சுவாசப்பாதை செயலிழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும் ஆபத்துகள் ரொம்பவே அதிகம். இதனால் இதுபோல பறவைகள் எச்சங்கள் அதிகம் இருக்கும் பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

ஒரே ஒரு புறாவால் ஆண்டுக்கு சுமார் 12 கிலோ கழிவுகளை உற்பத்தி செய்யும் முடியும். புறாக்களின் கழிவுகள் இயல்பாகவே ஆசிட் கொண்டவை. இவை கட்டிடங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களைக் கூட சேதப்படுத்தும் ஆபத்து இருக்கிறது. இது சால்மோனெல்லா கிருமிகளையும் பரப்புகிறது. இவை தான் ஐஎல்டி பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. இந்தியாவில் புறாக்கள் மற்றும் அதன் எச்சங்களில் இருந்தே இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

Chella

Next Post

கடைகளில் பில் செலுத்தும் போது செல்போன் எண் கொடுக்க வேண்டிய அவசியமில்லை!… மத்திய அரசு!

Mon Sep 25 , 2023
பெரும்பாலான கடைகளில் பொருட்கள் வாங்கிய பின் பில் போடுவதற்கு செல்போன் எண் கேட்கப்படுகிறது. உதாரணமாக மால்களில் வாங்கும் பொருட்கள் அனைத்திற்கும் போன் நம்பர் கேட்கப்படுகிறது. பெரிய கடைகளிலும் போன் நம்பர் கொடுத்தால்தான் பில் போடுவோம் என்றே கூறப்படுகிறது. ஆனால் மக்கள் பலரும் போன் நம்பரை பகிர விரும்புவது இல்லை. பல இடங்களில் வாடிக்கையாளர்கள் சட்ட விதிகளை சொல்லி.. நம்பரை கொடுக்க மாட்டோம் என்று கூறினாலும் கூட.. நம்பர் கொடுத்தால்தான் பொருட்களை […]

You May Like