கோவையில் நடு ரோட்டில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய இளைஞர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவையில் இடையர் வீதியில் பேக்கரி அருகே இரவு நேரத்தில் சில இளைஞர்கள் பிறந்த நாள் கொண்டாடியுள்ளனர். அவர்களின் வீடியோவை பதிவு செய்து சிலர் அதை சமூக வலைத்தலங்களில் பதிவிட்டதை அடுத்து அந்த வீடியோ வைரலானது.
இது குறித்து வெறைட்டிஹால் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மக்களை அச்சுறுத்தும் வகையில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வந்தது.
அப்போது கத்தியால் கேக் வெட்டியவர்கள் கோவை செல்வபுரம் தெலுங்கு பாளையம் பிரிவை சேர்ந்த அசோக் குமார் , அரவிந்த் குமார் மற்றும் வடவள்ளி பி.என்.புதூரை சேர்ந்த தினேஷ் குமார். காந்தி பார்க் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் ஆகியோர் என்பது தெரியவந்தது.
அவர்கள் அசோக்குமாரின் பிறந்த நாளை சாலையில் சிறிய ரக பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்த அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களில் அரவிந்த் குமார் தவிர மற்ற 3 பேர் மீதும் கோவையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் அடிதடி , கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளது.