நாகாலாந்து மாநிலம் திமாபூரில் சுயசார்பு இந்தியா நிதியின் கீழ், BizAmp திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்துவதையும், SRI நிதியின் கீழ் உள்ள பலன்களைப் பயன்படுத்தி அவற்றின் வணிகங்களைப் பெருக்குவதையும் நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
BizAmp நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் வணிகத்தைப் பெருக்கக் கொண்டு வரப்பட்ட முதல் விழிப்புணர்வுத் திட்டமாகும். இந்திய பொருளாதாரத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, இளைஞர்களிடையே தொழில் முனைவோரை மேம்படுத்த இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தியப் பொருளாதாரம் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை அடைவதற்கான அமைப்பை உருவாக்கவும் கவனம் செலுத்துவது அவசியம். நாட்டின் பொருளாதார நலனுக்கு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையை வளர்ப்பது முக்கியம்.