BJP Annamalai | நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், போட்டியிடுவதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். அந்தவகையில், திமுக தனது கூட்டணி குறித்த முடிவுகளை தெரிவித்துள்ளது. மேலும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் தனது கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடங்க காத்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், மக்களவை தேர்தலையொட்டி கொங்கு மண்டலத்தில் நியூஸ் கிளவுட் என்ற தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் திமுக – அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக (41% பேர் ஆதரவு) முதலிடம் பிடித்துள்ளது. திமுக இரண்டாவது இடத்தையும், அதிமுக 3-வது இடத்தையும் பிடித்துள்ளன. பாஜக வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், கொங்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் அதிமுவை வீழ்த்தும் அளவிற்கு வளரவில்லை என கருத்துக்கணிப்பு மீது விமர்சனமும் எழுந்துள்ளது.
Read More : Annamalai | தமிழ்நாட்டில் எம்பிக்களின் சீட்டை உறுதி செய்த அண்ணாமலை..!! பக்கா ஸ்கெட்ச்..!!