fbpx

Annamalai | கோவையில் பரபரப்பு.!! பிரச்சாரத்தில் கேள்வி கேட்ட நபரை தாக்கிய பாஜக தொண்டர்கள்.!!

Annamalai: கோவையில் பாஜக(BJP) தலைவர் அண்ணாமலை பிரச்சாரத்தின் போது கேள்வி கேட்ட நபரை பாஜக தொண்டர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியாவில் பொதுத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்க இருக்கிறது. தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. வாக்குப்பதிவு நாள் நெருங்கி வருவதை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் திமுக அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் தீவிரமான களப்பணியில் ஈடுபட்டு வருகின்றன.

தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்கிறது. அந்தக் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை(Annamalai) கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்பாக பாக்கு அரசியலில் தனக்கு ஈடுபாடு இல்லை என அண்ணாமலை தெரிவித்து இருந்தார். எனினும் தலைமையின் உத்தரவின் பேரில் அவர் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

தனது தொகுதியில் தொண்டர்களுடன் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் அண்ணாமலை. இந்நிலையில் பல்லடம் தொகுதியில் அண்ணாமலை பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே கை கலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. பாஜக தொண்டர்களுடன் பல்லாவரம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை விசைத்தறி தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து பேசினார்.

அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு நபர் பாஜக ஆட்சியில் தான் விசைத்தறி தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தார். இதனைக் கேட்டு கோபமடைந்த பாஜக தொண்டர்கள் அந்த நபரை தாக்கினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More: பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்!

Next Post

DMK | "உதயசூரியனுக்கு போடும் ஓட்டு மோடிக்கு வைக்கும் வேட்டு"… சேலத்தில் தெறிக்க விட்ட உதயநிதி ஸ்டாலின்.!!

Mon Apr 8 , 2024
DMK: சேலம் பிரச்சாரத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் உதயசூரியன் சின்னத்தில் போடும் ஓட்டு பிரதமர் மோடிக்கு வைக்கும் வேட்டு என வைத்திருக்கிறார். 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது. 18-வது பொது தேர்தலில் வாக்குப்பதிவு இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன . தமிழகத்தில் இந்தியா கூட்டணி சார்பாக திமுக(DMK) மற்றும் அதன் கூட்டணி […]

You May Like