fbpx

பிரச்சாரம் செய்யும்போது பெண்ணை இழுத்து வைத்து முத்தம் கொடுத்த BJP வேட்பாளர்..!! பெரும் பரபரப்பு..!!

மக்களவை தேர்தலுக்காக பிரச்சாரத்திற்கு சென்ற இடத்தில் பெண் ஒருவருக்கு பாஜக வேட்பாளர் முத்தம் கொடுத்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் தீவிரமான வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் 42 மக்களவைத் தொகுதிகள் இருக்கும் நிலையில், அங்கு ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7,13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்கத்தின் மால்டா வடக்கு சிட்டிங் எம்.பியாக இருக்கும் ககென் முர்மு பாஜக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். இவர், அந்த பகுதியில் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், பிரச்சாரம் செய்ய சென்ற இடத்தில் அங்கிருந்த பெண் ஒருவருக்கு முத்தம் கொடுத்துள்ளார். இச்சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தையும், வீடியோக்களையும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பரப்பி பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறது.

இந்நிலையில், இதுதொடர்பாக ககென் முர்மு விளக்கம் அளித்துள்ளார். அதாவது, “அந்த பெண் என்னுடைய உறவினர் என்றும், அவர் எனக்கு குழந்தை மாதிரி எனவும் கூறியுள்ளார். மேலும், குழந்தையை முத்தமிடுவது தவறில்லை, பெண்களை நான் தாயாக நினைக்கிறேன். அனைத்து பெண்களையும் பாஜக மதிக்கிறது” என்று விளக்கம் அளித்துள்ளார்.

Read More : கால்களில் கூச்ச உணர்வா..? கடுமையான வலியா..? கல்லீரலுக்கு ஆபத்து..!! உடனே மருத்துவரை பாருங்க..!!

Chella

Next Post

வீடியோ: BJP தலைவரின் மருமகன் கொலை வழக்கு.!! வெளியான சிசிடிவி ஆதாரம்.!! தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறை.!!

Wed Apr 10 , 2024
BJP: உத்திர பிரதேச மாநிலத்தின் சுல்தான்பூர் நகரில் பாஜக தலைவரின் மருமகன் சுட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியமான சிசிடிவி ஆதாரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உத்திர பிரதேச மாநிலம் சுல்தான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் நாராயன் சிங். பாஜக(BJP) தலைவரின் மருமகனான இவரும் அனுஜ் சர்மா என்பவரும் ஏப்ரல் 7-ஆம் தேதி மர்ம நபர்களால் சுடப்பட்டனர். விஜய் நாராயன் சிங் கடந்த செப்டம்பர் 2023 ஆம் ஆண்டு […]

You May Like