fbpx

பீகாரில் உச்சக்கட்ட அரசியல் குழப்பம்.. எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க முதலமைச்சர் திட்டம்..?

பீகாரில் பாஜக – ஐக்கிய ஜனதா தள கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.. எனினும் இந்த கூட்டணியில் கடந்த சில நாட்களாக விரிசல் ஏற்பட்டு வந்தது.. பாஜக மீது ஐக்கிய ஜனதா தள கட்சியினர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.. இந்த சூழலில் மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் புறக்கணித்ததாக கூறப்படுகிறது..

இந்நிலையில் பாஜக உடனான கூட்டணியை ஐக்கிய ஜனதா தளம் கட்சி முறித்துக் கொள்ள உள்ளதாக தகவல் வெளியான வண்னம் உள்ளது.. அதற்கேற்றார் போல் பீகார் தலைநகர் பாட்னாவில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருவதால் பீகாரில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவுகிறது..

பாஜக கூட்டணியில் இருந்து விலகி எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நிதிஷ்குமார் ஆட்சியமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.. இந்நிலையில் பீகார் ஆளுநர் பகு சௌஹானை சந்திக்க முதல்வர் நிதிஷ்குமார் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

இதற்கிடையில், ஆளுநர் பகு சவுகானை சந்திக்க பாஜகவும் நேரம் கோரியுள்ளது. மாநில அமைச்சரவையில் உள்ள 16 அமைச்சர்களும் தங்களது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் இன்று அளிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பீகார் துணை முதல்வர் தர்கிஷோர் பிரசாத் இல்லத்தில் இன்று காலை பாஜக தலைவர்கள் ஆலோசனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

இந்தியாவில் சீன மொபைல்களுக்கு தடை விதிக்க அதிரடி முடிவு..! இதுதான் காரணமாம்..!

Tue Aug 9 , 2022
இந்தியாவில் 12 ஆயிரம் ரூபாய்க்குக் குறைவான சீன மொபைல்களை தடை செய்யத் திட்டமிட்டுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டின் முதல் கால் பகுதிக்கான விற்பனையில் இத்தகைய 12 ஆயிரம் மதிப்பிலான மொபைல் விற்பனை மூன்றாம் இடம் வகிக்கிறது. அதிலும், சீன நிறுவனங்கள் மட்டுமே 80 சதவீத விற்பனையைச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய பெரிய நிறுவனங்களின் வியாபார போட்டியில் சிக்கித் தவிக்கும் இந்திய நிறுவனங்களை மீட்டெடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக […]
’இனி இந்த விலையில் 4ஜி போன்கள் கிடைக்காது’..!! விற்பனைக்கு தடை..!! மத்திய அரசு அதிரடி..!!

You May Like